கம்பராமாயணம் 8407 · யுத்த 19.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எல்லி சுற்றிய மதிநிகர் முகத்தியர் - இரவில் சுற்றி வரும் நிலவினை ஒத்த முகத்தினையும்; எரிவீழ் அல்லி சுற்றிய கோதையர் - நெருப்பைக் காட்டிலும் சிவந்த அகவிதழ்களை உடைய செவ்வல்லி மாலையைச் சுற்றிய கூந்தலையும் (உடைய அரக்கியர்கள், களம் புகுந்து அடைந்தார் - போர்க்களம் புகுந்து அடைந்து; புல்லி முற்றிய உயிரினர் - (அவர்களால்) தழுவப்பட்டு முடிந்த உயிரினை உடையவர்களாய்; பொருந்தினர் கிடந்தார்- பொருந்திக் கிடக்கின்ற; வயவர் - அரக்க வீரர்கள்; வல்லி சுற்றிய - கொடியினால் தழுவப்பட்ட; மாமரம் நிகர்த்தனர் - பெரிய மரம் விழுந்து கிடப்பது போல் விழுந்து கிடந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Women with faces like the moon that circles the night, with garlands
- of red lilies brighter than falling fire wound in their hair, came onto the field;
- clasped by them, their lives at an end, the warriors
- lay there like great trees wound about with creepers.
What the poem says
The rākṣasa wives come to the battlefield to look for their husbands. Their faces are like the moon and they wear garlands of red water-lilies in their hair.
They throw themselves on the bodies of the dead warriors and embrace them. The dead men in their arms look like great fallen trees with creepers wrapped round them.