கம்பராமாயணம் 8408 · யுத்த 19.61

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வணங்கு நுண்ணிடை, வனமுலை, செக்கர் வார் கூந்தல்,
அணங்கு வெள் எயிற்று, அரக்கியர் களத்து வந்து அடைந்தார்
குணம் கொளும் துணைக் கணவர்தம் பசுந்தலை கொடாது
பிணங்கு பேய்களின் வாய்களைப் பிளந்தனர் பிடித்தார்

பொருள் · Meaning in Tamil

வணங்கு நுண் இடை - ஒசியும் நுண்மையான இடையினையும்; வனமுலை - அழகிய மார்பகங்களையும்; செக்கர் வார் கூந்தல் - சிவந்த நீண்ட கூந்தலினையும்; அணங்கு வெள் எயிற்று - வருத்தும் தன்மை கொண்ட வெண்மையான பற்களையும்; அரக்கியர் - உடைய அரக்கியர்கள்; களத்து வந்து அடைந்தார் - போர்க்களத்துக்கு வந்து அடைந்தவர்களாகி, குணம் கொளும் - (தங்களிடம்) அன்பு எனும் பண்பு கொண்டிருந்த; தம்- தங்களுடைய; துணைக்கணவர் - துணையாகிய கணவர்களுடைய; பசுந்தலை கொடாது - பசுந்தலையை உண்பதற்காகக் கையில் கொண்டு கொடுக்காமல்; பிணங்கு பேய்களின் - மாறுபடுகின்ற பேய்களின்; வாய்களைப் பிடித்தே பிளந்தனர் - வாய்களைப் பிடித்துப் பிளந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With slender waists that bend, lovely breasts, long red hair
  2. and fearsome white teeth, the rākṣasa women came onto the field,
  3. and, refusing to give up the fresh heads of their beloved husbands,
  4. seized the mouths of the quarrelling ghouls and tore them apart.

What the poem says

Some of the rākṣasa women find ghouls (pēy) fighting over the heads of their dead husbands, ready to eat them.

Fierce in their grief, with their long red hair and dangerous white teeth, the women refuse to give the heads up. They seize the ghouls' jaws and tear them open.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇaṅku nuṇ iṭai, vaṉa mulai, cekkar vār kūntal,
aṇaṅku veḷ eyiṟṟu, arakkiyar kaḷattu vantu aṭaintār
kuṇam koḷum tuṇaik kaṇavartam pacun talai koṭātu
piṇaṅku pēykaḷiṉ vāykaḷaip piḷantaṉar piṭittē