கம்பராமாயணம் 8409 · யுத்த 19.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுடரும் வெள் வளைத்தோளி - ஒளி விடுகிற வெள்ளிய வளையல்களை அணிந்த தோள்களை உடையாள் ஒருத்தி, தன் கொழுநனைத் தொடர்வாள் - தன் கணவனைப் (போர்க்களத்தில் தேடித்) தொடர்ந்து சென்றவள்; உடரும் அங்கமும் கண்டு - (அங்கு அவனது) உடலினையும் (கை, கால் முதலிய) உறுப்புகளையும் பார்த்து; கொண்டு ஒருவழி உய்ப்பாள் -(அவற்றை எல்லாம் திரட்டிக்) கொண்டு (வந்து) ஓரிடத்தில் சேர்ப்பவள்; ஓர் குறு நரி - ஒருசிறிய நரி; குடரும் ஈரலும் கண்ணும் கொள்ள - குடலையும், ஈரலையும், கண்ணையும் தூக்கச் செல்ல; தொடர ஆற்றலள் - அதனைத் தொடர்ந்து செல்லும் வலிமை அற்றவளாகி; நெடிது உயிர்த்து - பெருமூச்சு விட்டு; ஆர் உயிர் துறந்தாள் - தனது அரிய உயிரை விட்டாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A woman with shoulders bright with white bangles, searching for her husband,
- found his body and limbs, and gathered them into one place;
- when a small jackal took his entrails, liver and eyes,
- she had no strength to follow, and with a long sigh she gave up her precious life.
What the poem says
One rākṣasa woman finds her husband's body hacked to pieces. She carefully gathers the parts together in one place.
A small jackal snatches his entrails, liver and eyes and runs off. She is too weak to chase it, and with a long sigh she dies of grief.