கம்பராமாயணம் 8411 · யுத்த 19.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தம் துணைக் கணவரை நாடி - தங்களுக்குத் துணைவனாய் அமைந்த கணவரைத் தேடி; விலங்கல் அன்ன - மலையைப் போன்று; வான் பெருங் குப்பையின் மேலார் - உயர்ந்த பிணக் குவியலின் மேலேறி நின்றவர்களான; அலங்கல் ஓதியர் - மாலையை அணிந்த கூந்தலையும்; நலம் கொள் நெஞ்சினர் - நன்மையை (விரும்பிக் கொண்ட நெஞ்சினையும் (உடைய அரக்க மகளிர்); அருந்துணை பிரிந்து - (தம்) அருமையான துணையாகிய (ஆண் மயிலைப்) பிரிந்து; நின்று அயரும் - நின்று சோருகிற; பொலம் கொள் - அழகு கொண்ட; மாமயில் - பெரிய (பெண்) மயில்; வரையின் மேல் திரிவன போன்றார் - மலையின் மீது சுற்றித் திரிவன ஒத்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With loving hearts, looking for their dear husbands,
- standing on top of the high heaps of corpses like hills,
- the women with garlanded hair were like lovely
- peahens that, parted from their dear mates, wander drooping on the mountains.
What the poem says
The rākṣasa women climb the mountain-like heaps of corpses to search for their husbands.
Standing there with garlands in their hair, grieving and lost, they look like beautiful peahens wandering forlorn on the mountain slopes, separated from their mates.