கம்பராமாயணம் 8412 · யுத்த 19.65

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலவர் - சில (அரக்க) மகளிர்; தம் பெரும் கணவர் - தங்களுடைய பெருமை மிக்க கணவர்கள்; பலரும் - பல பேர்களும்; தம் செருத்தொழில் சினத்தால் - (தங்களுடைய) போர்த் தொழிலில் (மூண்ட பெருஞ்) சினத்தினால்; வாய் மடித்து - வாயை மடித்து (இதழ்களைப் பல்லால் கடித்துக்கொண்டு); உயிர் துறந்தார்களைப் பார்த்தார் - உயிரை விட்டவர்களைப் பார்த்து; அயலாள் கலவியின் குறி - மாற்றாள் கலவிக்காலத்தில் செய்த பற்குறிகளை; அலைவு இல் வெள்ளெயிற்றால் - அசைவு இல்லாத வெண்மையான பற்களினால்; இதழ் மறைத்துளது - இதழில் (செய்யப்பட்ட பற்குறியை) மறைத்துள்ளது; (அதற்குக் காரணம்) காண்டும் என்று ஆம் - நாம் பார்த்து விடுவோம் என்று கருதிப் போலும்; எனக் கனன்றார் - என்று எண்ணிச் சினம் கொண்டார்கள்.

தங்கள் உயிர்த்துணைக்கணவர் இறந்து கிடத்தலைக் கூட நினைக்காமல் அவர்கள் பல்லால் இதழைக் கடித்துக்கொண்டு இருக்கக் காரணம் அயலாள் பற்குறியை மறைக்க என்று கூறியது அம்மகளிருக்குத் தங்கள் கணவன் மீது இருந்த கழி காமத்தைக் காட்டச் சொல்லப்பட்டது போலும் என்க. அவ்வாறு கொள்ளாக்கால் அவலச் சூழலில் வரும் எண்ணமாக இதனைக் கொள்ளுவது சரியாக அமையாது என்பதையும் எண்ணுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some women, seeing their great husbands, many of whom
  2. had died biting their lips in the fury of their battle-work,
  3. burned with anger, thinking, He hides his lip with his steady white teeth
  4. so that we will not see the marks of love left by another woman.

What the poem says

Many warriors died biting their lips in battle-fury. Some of their wives see this and become jealous instead of grieving. They imagine that their husbands are hiding, under their clenched teeth, the love-bites of another woman.

The commentary suggests the poet shows by this how passionately the women loved their husbands. It also notes that such a thought sits strangely in a scene of mourning unless it is read that way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cilavar tam peruṅ kaṇavartam cerut toḻil ciṉattāl
palarum, vāy maṭittu uyir tuṟantārkaḷaip pārttār,
‘alaivu il veḷ eyiṟṟāl itaḻ maṟaittuḷatu, ayalāḷ
kalaviyiṉ kuṟi kāṇṭum eṉṟu ām‘ eṉak kaṉaṉṟār.