கம்பராமாயணம் 8421 · யுத்த 19.74

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஐம்பத்தொரு வெங்கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன் மொய் தொழிலான்
வெம்பி களியோடு விளிந்து எழு திண்
கம்பம் கரி உண்டை கடாய் எனவே.

பொருள் · Meaning in Tamil

மொய் தொழிலான் - நெருங்கி வந்து போர் செய்த மாபக்கன்; வெம்பி - சினந்து; களியோடு - மது மயக்கத்தோடு; விளித்து - பேரொலி செய்து; எழு - எழுகின்ற; திண் கம்பக்கரி - வலிமையான கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த யானை; உண்டை கடாய் எனவே - மண் உருண்டையை விரைவாக வீசியதைப் போல்; ஐம்பத்தொரு வெங்கணை - ஐம்பத்தொரு கொடிய அம்புகளை; அங்கதன் - அங்கதனது; மாமொய்ம்பில் - அகன்ற வலிமை உள்ள மார்பில்; புகஉய்த்தனன் - புகும் படியாகச் செலுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fifty-one fierce arrows into Aṅkataṉ's great
  2. shoulders he drove, he of close-pressed fighting,
  3. enraged, like a strong elephant tied to its post
  4. that breaks loose in frenzy and trumpets and hurls balls of earth.

What the poem says

Mahāpārśva, closing in, shoots fifty-one fierce arrows into Aṅkataṉ's broad, strong chest.

He is compared to a powerful elephant maddened with must, trumpeting as it tears free of its tethering post and flings clods of earth about.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aimpattoru veṅ kaṇai aṅkataṉ mā
moympil puka uyttaṉaṉ moy toḻilāṉ
vempi kaḷiyōṭu viḷintu eḻu tiṇ
kampak kari uṇṭai kaṭām eṉavē.