கம்பராமாயணம் 8422 · யுத்த 19.75

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
காரோடு நிறக் கத நாகம் அனான்
தேரோடும் எடுத்து உயர் திண் கையினால்
பாரோடும் அடுத்து எறி பண்பு இடையே.

பொருள் · Meaning in Tamil

ஊரோடு மடுத்து - ஊர்தல் தொழிலுடன் பொருந்தி, ஒளியோனை உறும் - கதிரவனைச் சேருகின்ற; கார் ஓடும் நிறக் - கருமை ஓடுகிற நிறத்தினை உடைய; கத நாகம் அனான் - சினம் மிக்க (இராகு கேது என்னும்) பாம்புகள் போன்றவனாகிய (அங்கதன்); உயர்திண் கையினால் - (தன்னுடைய) உயர்ந்த வலிமையான கைகளினால்; தேரோடும் எடுத்து - (அந்த மாபக்கனைத்) தேருடன் எடுத்து; பாரோடும் அடுத்து - நிலத்தில் பொருந்தும் படியாக; எறி பண்பிடையே - எறிந்த போது (அடுத்த பாடலில் முடியும்.

தேரைப் பற்றச் சென்ற அங்கதனுக்குச் சூரியனைப் பற்றச் செல்லும் இராகு கேதுக்கள் உவமையாம். ஊரோடு - ஊர் கோளோடு. ஊர்கோள் - சூரியனைச் சுற்றிய பரிவேடம் வட்டவடிவமாக சூரியனைச் சுற்றி அமைவது. அந்த ஊர் கோளோடு விழுங்கச்செல்லும் நாகம்; தேரோடு மாபக்கனைப் பற்றும் அங்கதனுக்கு உவமையாம் என்பது மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the angry dark-hued serpent that, with the halo,
  2. closes in upon the shining Sun,
  3. he lifted him up chariot and all in his strong, high hands
  4. and, as he dashed him to the ground —

What the poem says

Aṅkataṉ grabs Mahāpārśva, chariot and all, in his mighty hands and hurls him to the ground. The sentence runs on into the next verse.

The poet compares Aṅkataṉ seizing the chariot to the dark serpent of the eclipse (Rāhu or Kētu) seizing the Sun. The commentary explains a scholar's reading of ūrōṭu: the halo that rings the sun, which the serpent swallows along with it, matches the chariot seized along with Mahāpārśva.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūrōṭu maṭuttu oḷiyōṉai uṟum
kār ōṭum niṟak kata nākam aṉāṉ
tērōṭum eṭuttu uyar tiṇ kaiyiṉāl
pārōṭum aṭuttu eṟi paṇpiṭaiyē.