கம்பராமாயணம் 8424 · யுத்த 19.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘சூலமெனின் அன்று இது; தொல்லை வரும்
காலம் ‘என உன்னு கருத்தினனாய்
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர்
ஆலம் உடை அம்பின் அறுத்தனனால்.
பொருள் · Meaning in Tamil
ஞாலம் உடையான் - உலகங்கள் எல்லாம் தன் வடிவாக உடைய (இராமன்; இது - இப்போது வருகின்ற சூலம்; சூலம் எனின் அன்று - எளிமையான சூலமோ எனின் அன்று; தொல்லை வரும் காலம் என - பழமையாக வருகின்ற காலபாசம் என்று; உன்னு - நினைக்கிற; கருத்தினனாய் - கருத்தினை உடையவனாய், அது நாம் அற - அதன் பெயர் அழியும்படியாக; ஓர் ஆலம் முக அம்பின் - ஒப்பற்ற நஞ்சு தோய்ந்த முனையினை உடைய அம்பினால்; அறுத்தனனால் - அறுத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- This is no trident; it is Death that comes from of old,
- so thinking in his mind,
- the lord who holds the world cut it down, so that its very name was gone,
- with an arrow whose head was poison.
What the poem says
Irāmaṉ, whose body is the whole world, sees the trident flying at Aṅkataṉ. He recognises it as no ordinary weapon but as deadly as Death's own noose.
He shoots it down with a poison-tipped arrow, so thoroughly that nothing of it is left.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cūlam eṉiṉ aṉṟu itu; tollai varum
kālam ‘eṉa uṉṉu karuttiṉaṉāy
ñālam uṭaiyāṉ atu nām aṟa ōr
ālam muka ampiṉ aṟuttaṉaṉāl.