கம்பராமாயணம் 8429 · யுத்த 19.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாளார் மரம் நீலன் எறிந்தன தன்
வாளால் மடிவித்து வலித்து அடர்வான்
தோள் ஆசு அற வாளி துரந்தனனால்
மீளா வினை நூறும் விடைக்கு இளையான்.
பொருள் · Meaning in Tamil
நீலன் - நீலன்; எறிந்ததனை - எறிந்ததாகிய; தாள் ஆர் மரம் - அடி பெருத்த மரத்தை; வாளால் மடிவித்து - (தன்) வாளால் அழித்து; வலித்து அடர்வான் - வலிமையோடு பொருபவன் ஆகிய (மாலியினது); தோள் ஆசு அற - தோளின் மூட்டு அறும்படியாக; மீளா வினை நூறும் விடைக்கு இளையான் - போக்குதற்கு அரிய வினைகளைப் போக்குபவனாகிய இடபம் போன்ற இராமனுக்கு இளையவனாகிய இலக்குவன்; வாளி துரந்தனனால் - அம்புகளைச் செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The tree with a mighty trunk that Nīlaṉ hurled
- he cut down with his sword and pressed on with strength;
- then, so that his shoulder's joint was severed, an arrow was shot
- by the younger brother of the bull who destroys deeds that never let go.
What the poem says
Māli cuts down with his sword a thick-trunked tree that Nīlaṉ throws at him, and keeps fighting.
Ilakkuvaṉ then shoots an arrow that cuts through Māli's shoulder joint. He is called the younger brother of Irāmaṉ, the bull among men, who destroys the karma that otherwise never releases its hold.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāḷ ār maram nīlaṉ eṟintataṉai
vāḷāl maṭivittu valittu aṭarvāṉ
tōḷ ācu aṟa vāḷi turantaṉaṉāl
mīḷā viṉai nūṟum viṭaikku iḷaiyāṉ.