கம்பராமாயணம் 8430 · யுத்த 19.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மின்போல் மிளிர் வாளொடு - மின்னலைப்போல் விளங்குகின்ற வாளுடன்; தோள் விழவும் - (தன்) தோள் அறுபட்டுக் (கீழே விழவும்; தன் போர் தவிராதவனை - (தன்) போரை நீங்காமல் செய்பவனாகிய (மாலியைப் பார்த்து இலக்குவன்; என் போலியர் போர் எனின் நன்று - என் போன்றவருடன் செய்யும் போர் என்றால் அது நல்லது; இது ஓர் புன்போர் - இது ஒரு புன்மையான போர் ஆகும்; என சலியா - என்று (கூறி) வெறுத்து; நின்று - நின்று; அயல் போயினனால் - அப்பால் போயினன்.
ஒப்பாகாதவனுடன் பொருதல் தகாது என இலக்குவன் அயல் போயினன் என்க. ஒருவனோடு பலர் பொரும் போர் புன்போர் என எண்ணி அயல் போயினன் எனினும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As his shoulder fell with the sword that flashed like lightning,
- he still would not give up his fight; and in disgust
- he said, A fight with men like me would be good; this
- is a mean fight, and stood, and went away to one side.
What the poem says
Māli's arm drops to the ground still holding its lightning-bright sword, yet he keeps on fighting. Ilakkuvaṉ refuses to go on.
He says a battle against an equal would be worthy, but this is a petty fight, and he turns away. The commentary gives two readings: he will not fight one so far beneath him, or he will not join a fight in which many attack one.