கம்பராமாயணம் 843 · பால 13.39

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பித்த யானை பிணங்கிப் பிடியில் கை
வைத்த; மேலிருந்து அஞ்சிய மங்கைமார்,
எய்த்து இடுக்கண் உற்றார், புதைத்தார் இரு
கைத் தலங்களில் கண் அடங்காமையே.

பொருள் · Meaning in Tamil

பித்த யானை - வெறி பிடித்த யானைகள்; பிணங்கு - மாறுபட்டு; பிடியில் கை வைத்த - பெண்யானைகளின் மேல் கையை வைத்தன; மேல் இருந்து அஞ்சிய - (அப்போது) அப் பெண் யானைகளின் மேல் இருந்து அஞ்சிய; மங்கைமார் - மகளிரின்; கண் புதைத்தார்க்கு - (இரு கைகளாலும்) கண்களை மூடத் தொடங்கியவர்க்கு; இரு கைத்தலங்களில் - இரண்டு கைகளுக்குள்; அடங்காமை - (அக் கண்கள்) அடங்காமையால்; எய்த்து - (அவர்கள்) இளைத்து; இடுக்கண் உற்றார் - வருத்தம் அடைந்தார்கள்.

பிடியின் மேல் இருந்த பெண்கள் அஞ்சிக் கண்களைப் புதைத்தனர் என்பது. கண்கள் கைகளில் அடங்காமையால் அவர்கள் மிக வருந்தினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Frenzied bull elephants, quarrelling, laid their trunks on the cow-elephants;
  2. and the women riding on them, terrified,
  3. were worn out and in distress, for when they tried to cover them,
  4. their eyes would not fit within their two hands.

What the poem says

Bull elephants in must jostle and reach out with their trunks toward the cow-elephants carrying the women. The frightened riders try to cover their eyes so as not to see.

But their eyes are so large, the ideal of beauty, that two hands cannot hide them, and the women are left helpless and distressed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pitta yāṉai piṇaṅkip piṭiyil kai
vaitta; mēl iruntu añciya maṅkaimār,
eyttu iṭukkaṇ uṟṟār, putaittārkku iru
kaittalaṅkaḷil kaṇ aṭaṅkāmaiyē.