கம்பராமாயணம் 844 · பால 13.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காமர் தாமரை - அழகிய தாமரையின்; நாள் மலர்க் கானத்துள் - அன்று பூத்த பூங்காட்டில்; ஆமைமேல் வரு - ஆமை மேல் வருகின்ற; தேரையின் - தேரையைப் போல; வாலதி பூமி தோய் - வால்கள் பூமியில் படியக்கூடிய; பிடி - பெண் யானைகளில்; வாமம் மேகலையாரிடை - அழகிய மேகலையணிந்த பெண்களோடு; சிந்தரும் போயினார் - சிந்தரும் சென்றார்கள்.
தாமரைக் காடு மகளிர்க்கும், ஆமை பெண் யானைக்கும், தேரை சிந்தர்க்கும் உவமையாயின என்பது. சிந்தர்: மூன்றடி உயரமுள்ளவர் - அந்தப்புரத்தில் மெய்க்காப்பாளராவார். பெண்யானைக்கு வால் பூமியில் தோய்தல் உத்தம இலக்கணமாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Among the women of the lovely girdles, the dwarfs too went along
- on cow-elephants whose tails reach down to the ground,
- like toads riding on the backs of tortoises
- in a forest of beautiful, fresh-blown lotuses.
What the poem says
The dwarfs who serve as guards of the women's quarters ride along on cow-elephants among the ladies.
The comic picture: the women are a forest of fresh lotuses, the elephants are tortoises moving among them, and the little guards perched on top are toads riding on the tortoises. A cow-elephant's tail touching the ground was considered a mark of the finest breed.