கம்பராமாயணம் 845 · பால 13.41

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கம்ப மா வர - யானை தொடர்ந்து வர; ஒரு கொம்பு அனாளை - பூங்கொம்பு போன்ற ஒருத்தியை; கொண்டு - சுமந்து கொண்டு; கால்கள் வளைத்து - முன்னங் கால்களை வளைத்து; ஓடும் குதிரை - ஓடுகின்ற குதிரையானது; ஈங்கு இம்பர் நாட்டின் - இங்கே இவ்வுலகத்திலே (வாழ்வதற்கு), தரம் அல்லள் - ஏற்றவளாக இல்லை; இவள் - இந்தப் பெண்; உம்பர் கோமகற்கு - தேவர்கள் தலைவனான இந்திரனுக்கு (உரியவள்); என்கின்றது - என்று கூறுவதை; ஒக்கும் - ஒத்திருக்கும்.

ஒரு குதிரை ஒரு பெண்ணையேற்றிக் கொண்டு தாவிச் செல்லும்போது வானத்தில் செல்வதுபோல் உள்ளது. அது தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு உரியவள் இவள் என்று அவனிடம் அவளைக் கொண்டு செல்வது போன்றுள்ளது என்றார் - தற்குறிப்பேற்ற அணி. கம்ப மா - யானை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'She is not of a rank for this earthly land; here she is
  2. meant for the prince of the gods' — so it seemed to say,
  3. the horse that, with an elephant coming on behind, curved its legs
  4. and ran off carrying a girl as slender as a flowering sprig.

What the poem says

A horse, startled by an elephant behind it, bolts with a beautiful girl on its back, gathering its legs and bounding so high it seems to be flying.

Kampaṉ imagines its reason: the horse has decided she is too lovely for this world and is carrying her off to heaven for Intiraṉ, king of the gods. It is another fanciful attribution of motive, a favourite figure in this chapter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'impar nāṭṭiṉ taram allaḷ, īṅku, ivaḷ
umpar kōmakaṟku' eṉkiṉṟatu okkumāl,
kampa mā varak, kālkaḷ vaḷaittu oru
kompu aṉāḷaik koṇṭu ōṭum kutiraiyē.