கம்பராமாயணம் 846 · பால 13.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(பெண்கள்) எந்தை - எம் தந்தையான இராமன்; வில் இறுத்தான் - சிவ தனுசை முறித்தான்; எனும் இன் சொலை - என்னும் இனிய வார்த்தையை; மைந்தர் பேச - ஆடவர் சொல்ல; மனம் களித்து - (அது கேட்டு) மனம் மகிழ்ந்து; சோர்பவை - அவிழ்ந்து விழக்கூடிய; சந்தம் வார் குழல் - அழகிய நீண்ட கூந்தலை; தாங்கலார் - ஏந்திக் கொள்ளாதவர்களாயும்; சிந்தும் மேகலை - (அறுந்து) விழுகின்ற மேகலையணியை; சிந்தையும் செய்கலார் - (பொறுக்கியெடுக்க) எண்ணாதவர்களுமாகி; ஓடுவார் - (இராமனது திருமணம் கருதி) ஓடுவார்கள்.
மடந்தையர் களித்து, தாங்கலார், செய்கலார் ஓடுவார் என இயைக்கவும். ஆடவர் இராமனது வீரச் செயலைச் சொல்ல, அது கேட்ட மடந்தையர் திருமணத்தைக் காணும் விருப்பத்தால் ஓடுகின்றார். அவ்வாறு அவர்கள் ஓடும்போது கூந்தல் அவிழ்தல், மேகலை சிந்துதல் ஆகியவற்றையும் கருதாமல் செல்கின்றார் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Not holding up their long, lovely tresses as they came undone,
- not giving a thought to the girdles that broke and scattered,
- when the men spoke the sweet words, 'Our lord has broken the bow!',
- the women ran on, their hearts brimming with joy.
What the poem says
When the men in the procession tell the story of how Irāmaṉ broke the bow, the women are so eager to reach Mithilā and see the wedding that they break into a run.
They do not stop to pin up their hair as it falls loose or to pick up the jewelled girdles that snap and scatter on the road.