கம்பராமாயணம் 8438 · யுத்த 19.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினைப்
படைத்தானை நெடும் புகழ்ப் பைங்கழலான்
புடைத்தான் அவன் மார்பு பொடிச் சிதற.
பொருள் · Meaning in Tamil
கிடைத்தான் - தன்முன் வந்து தோன்றியவனாகிய; கிளர்வான் அடைத்தான் என - விளங்குகின்ற ஆகாயத்தை அடைத்தவன் என்று (கூறும்படி); மீது உயர் ஆக்கையினை படைத்தானை - மிக உயர்ந்த உடம்பு படைத்தவனாகிய; இகல் மாருதியை - பகைத் தொழில் வல்ல அனுமனை; நெடும் புகழ் பைங்கழலான் - மிக்க புகழை உடைய பசிய வீரக்கழலை அணிந்தவனாகிய வச்சிரத்து எயிற்றன்; அகல் மார்பு பொடிச்சிதற - அகன்ற மார்பு பொடியாகச் சிதறும் படியாக; புடைத்தான் - அடித்தான்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Māruti, mighty in battle, who came before him,
- who had a body rising so high it seemed to block the bright sky —
- the one with the green anklet of great fame
- struck him so that his broad chest seemed to scatter in dust.
What the poem says
Aṉumaṉ confronts Thunderbolt-Fang, his body grown so tall that it seems to fill the shining sky.
The rākṣasa, a famous warrior with a hero's anklet, strikes Aṉumaṉ on the chest with his mace with tremendous force, as if to smash it to powder.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiṭaittāṉ ikal mārutiyai kiḷar vāṉ
aṭaittāṉ eṉa mītu uyar ākkaiyiṉaip
paṭaittāṉai neṭum pukaḻp paiṅkaḻalāṉ
puṭaittāṉ akal mārpu poṭic citaṟa.