கம்பராமாயணம் 8442 · யுத்த 19.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நூறாயிர கோடிகொல்? அன்றுகொல்? என்று
ஆறு ஆயிரம் வானரும் அறிவின்
தேறா வகை நின்று திரிந்து உளதால்
பாறாடு களத்து ஒரு பாய் பரியே.
பொருள் · Meaning in Tamil
ஆறாயிர வானவரும் - ஆறாயிரம் தேவர்களும், நூறாயிர கோடி கொல் - நூறாயிரம் கோடி (குதிரைகள் போர்க்களத்தில்) உள்ளன போலும் (என்றும்); அன்று கொல் என்று - அன்று போலும் என்றும் (தடுமாறி); அறிவின் தேறாவகை - அறிவின் (துணைகொண்டு) தெளிய முடியாத படி; பாறு ஆடு களத்து - கழுகுகள் பறக்கிற போர்க்களத்தில்; ஒரு பாய்பரியே - (பிசாசனுடைய) ஒப்பற்ற பாயும் தன்மை உள்ள குதிரை; திரிந்து நின்றுளது - சுற்றித் திரிந்து நிற்பதாகும். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Is it a hundred thousand crores of them? Or not?, so
- even the six thousand gods, unable to settle it
- by their understanding, were left wondering, as it wheeled about
- on the field where vultures circled — that one leaping horse.
What the poem says
Picācaṉ's single horse darts round the vulture-haunted battlefield so fast that it seems to be everywhere at once.
The six thousand gods watching cannot decide whether there is one horse or a hundred thousand crores of them.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nūṟāyira kōṭikol? aṉṟukol? eṉṟu
āṟāyira vāṉavarum aṟiviṉ
tēṟā vakai niṉṟu tirintuḷatāl
pāṟu āṭu kaḷattu oru pāy pariyē.