கம்பராமாயணம் 8448 · யுத்த 19.101

Section யுத்த காண்டம் / 19. படைத் தலைவர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்னகைபால் - இனிய சிரிப்பினை உடையவளான சீதையினிடத்து; இன்று ஊதியம் உண்டு என - இன்று கிடைப்பதொரு நற் பேறு உண்டு என (நன்னிமித்தமாக) சென்று ஊதின தும்பிகள் - வண்டுகள் சென்று இசைத்தனவாயின; தென்திசையான் வன்தூதரும் - தென்திசைக் காவலனான யமனின் வலிய தூதர்களும்; ஏகினர் - (போரில் இறந்தவர்களின் உயிர்களைக் கொண்டு) தம் நகருக்குச் சென்றனர்; வஞ்சனையான் தன் தூதரும் - வஞ்சகனான இராவணனின் தூதர்களும்; தம்நகர்வாய் ஏகினர் - தமது நகரமாகிய இலங்கையினிடத்துச் சென்றனர் (படைத்தலைவர் அழிந்த செய்தியினைக் கொண்டு சென்றனர்.

படைத்தலைவர் அழிந்தமையை நற்செய்தியாகச் சீதைபால் வண்டுகள் எடுத்துச் செல்ல, துயரச் செய்தியாக இராவணனிடம் அவன் தூதர்கள் எடுத்துச்சென்றனர். வெற்றி தோல்விகளால் பாதிக்கப்படாத காலனின் தூதர்கள் தம் கடமையாக இறந்தோரின் உயிர்களைப் பற்றிச் சென்றனர் என்பதாம். கண்ணோட்டமின்றி உயிர் கொண்டு செல்லும் தன்மையுடைமை பற்றி வன்தூதர் என்றது அடைமொழிக் குறிப்பு. முதல் நாட் போரிலேயே தனக்கு "நாசம் வந்துற்றதனை" (பாடல் 7302) நன்குணர்ந்த பின்னும் அதனை வெளிப்படுத்தாமல் தன் உறவினரையும் சுற்றத்தாரையும் ஒருவர் பின் ஒருவராகக் களப்பலியாகப் போர்க்களத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்ததால் இங்கு இராவணனை "வஞ்சனையான்"- என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking, Today there is good to be had, the bees
  2. went humming to the one of the sweet smile; the harsh messengers
  3. of the lord of the south went their way; and the messengers
  4. of the deceiver also went to their city.

What the poem says

The battle is over and three sets of messengers set out. Bees fly to Cītai and hum to her, a good omen of the victory. The stern envoys of Yama, lord of the south, leave carrying the souls of the dead. Irāvaṇaṉ's messengers hurry back to Ilaṅkai with the bad news.

The commentary explains that Yama's envoys are called harsh because they take life without pity. Irāvaṇaṉ is called the deceiver because he knew from the first day that he was doomed, yet kept sending his kin to die one after another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṟu ūtiyam uṇṭu eṉa iṉṉakaipāl
ceṉṟu ūtiṉa tumpikaḷ; teṉ ticaiyāṉ
vaṉ tūtarum ēkiṉar; vañcaṉaiyāṉ
taṉ tūtarum ēkiṉar tam nakarvāy.