கம்பராமாயணம் 8449 · யுத்த 19.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏகி - (தூதர்கள், தம்நகருக்குச் சென்று; தனி மன்னன் இருந்துழிப்புக்கு இறைஞ்சினர் - ஒப்பற்ற மன்னவனாகிய இராவணன் இருந்த இடத்திற்குச்சென்று (அவனை) வணங்கி; “ஓகைப் பொருள் இன்று” என - மகிழ்ச்சிக்குரிய செய்தி சொல்வதற்கில்லையே என்று; உள் அழியா - மனம் வருந்தினவராய் (அத்தூதர்); வேகத்து அடல்வீரர் - போர்ச் செயலில் வல்லமையும் அஞ்சாமையும் உடைய படைத்தலைவரும் அவர்தம் படைஞரும்; விளிந்த எலாம் - இறந்த செய்தியை எல்லாம்; சோகத்தொடு சொல்லினர் - வருத்தத்துடன் கூறினார்கள்.
இராவணன் தன் குடிகளைப் பொறுத்தவரை சிறந்த மன்னனாகையால் ஒப்பற்ற மன்னன் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They went and entered where the peerless king sat,
- and, thinking, There is no glad news today, sick at heart,
- they bowed and told him with grief
- how all the strong and swift heroes had died.
What the poem says
Irāvaṇaṉ's messengers reach the palace and bow before him. Heavy-hearted, knowing they bring no good news, they tell him that all the commanders and their soldiers have been killed.
The commentary notes that the poet calls Irāvaṇaṉ a peerless king because, to his own subjects, he was indeed a great ruler. This closes the canto of the commanders' slaying.