கம்பராமாயணம் 8452 · யுத்த 20.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவன் எய்த - அவ்விராமன் இவ்விடம் வர; யானே செல எண்ணுவன் - (அவன் வருகையை அறிந்து) யானே (என் வஞ்சினம் முடிக்க) அவன் மேல் போர்க்குச் செல்ல எண்ணுவன் (எனினும்); தான் நேர்வது தீது எனவே - (தலைவனிருக்க) தானே ஒரு முடிவெடுப்பது தீமையெனவே; தணிவேன் - அடங்கியிருக்கின்றேன்; (அங்ஙனமன்றி) கோனே - தலைவனே! வானே, நிலனே முதல் மற்றும் எலாம் - வானும் நிலமும் முதலாக எல்லா இடங்களிலுமுள்ள எல்லாப் பொருள்களும்; எனை வெல்வது ஓர் கொள்கையதோ? - எனை வெல்லும் படியான தன்மை யுடையதோ?
தலைவனாகிய இராவணனின் அனுமதிக்காகக் காத்து அடங்கியிருந்ததல்லால் பகை கண்டு அஞ்சியோ, வென்றி குறித்து ஐயப்பட்டோ அடங்கி இருக்கவில்லை என்பதை மகரக்கண்ணன் தெளிவு படுத்துகின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When he came, I myself thought to go against him;
- but thinking it wrong to act on my own, I held back.
- Heaven, earth, and everything else besides,
- my king, could any of them have the power to defeat me?'
What the poem says
Makarakkaṇṇaṉ explains why he has not yet gone into battle. When Irāmaṉ arrived he wanted to ride out at once to fulfil his vow of revenge, but it would have been wrong to act without his king's word while the king was present.
He waited only out of duty, he says, not from fear of the enemy or doubt about winning: nothing in heaven or on earth could defeat him.