கம்பராமாயணம் 8454 · யுத்த 20.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ்வுரை மகரக்கண்ணன் அறைதலும் - அவ்வுரையை மகரக்கண்ணன் உரைத்தவுடன்; அரக்கன் - இராவணன்; ஐய! - (அவனை நோக்கி) ஐயனே! செவ்விது - (நீ கூறிய உரை முறைமையுடையது; சேறி! - (நீ செல்வாயாக; சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் - சென்று உனது பழைய பகையைத் தீர்த்துக் கொள்வாயாக என்று சொன்னான்; பெற்ற விடையினன் - (இங்ஙனம்) இராவணனிடமிருந்து விடை பெற்றவனாய்; வரம் பெற்று வளர்ந்த தோளான் - (தேவர் முதலானவர்களிடமிருந்து) பெற்ற வரங்களினால் பொலிந்த தோள்களை உடையவனும்; வெவ்வழியவனும் - கொடிய போர் நெறிகளை உடையவனும் (ஆகிய அம்மகரக்கண்ணன்; தேர்மேற் கொண்டான் போனான் - தேர்மேல் ஏறிக்கொண்டு (போர்க்களம் நோக்கிப்) போனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As Makarakkaṇṇaṉ spoke these words, the demon king said, 'Sir,
- it is right; go! Go and settle your old feud!'
- And he of cruel ways, having gained leave, mounted his chariot;
- bow in hand he went, he whose arms had grown strong on boons.
What the poem says
Irāvaṇaṉ approves the request at once: the plea is just, and Makarakkaṇṇaṉ may go and avenge his father.
With the king's leave, the young demon, ruthless in war and strong from boons granted by the gods, climbs into his chariot with his bow and sets off for the battlefield.