கம்பராமாயணம் 8457 · யுத்த 20.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பல்பெரும் பதாகைப் பத்தி - (அரக்கர் சேனைகள் பிடித்த) பல பெரிய கொடிகளின் வரிசைகளால்; மீமிசைத் தொடுத்த பந்தர் - மேலே தொடுக்கப்பட்ட பந்தரானது; எல்லவன் சுடர் ஒண் கற்றைமுற்ற - சூரியனது ஒளி பொருந்திய தொகுதியாகிய ஒளிக்கற்றைகளின் வெப்பம் முடிவுறும்படி; இன் நிழலை ஈய - இனிய நிழலைத் தரவும்; தொல்சின யானை அம்கை - பழையதாகிய கோபத்தையுடைய யானையினது அழகிய துதிக்கையினின்றும் உண்டாகிய, விலாழிநீர்த் துவலை தூற்ற - உமிழ் நீர்த் துவலை எங்கும் சூழவும்; செல்பெருங் கவியின் சேனை - (அரக்கர் சேனையை) எதிர்த்துச் செல்லுகின்ற பெரிய குரங்குச் சேனை; அமர்த்தொழில் சிரமம் தீர்ந்த - போர்த் தொழிலால் உண்டாகிய வருத்தம் நீங்கப் பெற்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the canopy woven overhead from rows of many great banners
- shut out the bright rays of the sun and gave sweet shade,
- and the spray from the trunks of the elephants of ancient wrath sprinkled all around,
- the great monkey army that marched against them was eased of the toil of war.
What the poem says
A touch of irony. The demon host carries so many banners that together they form a canopy overhead, blocking the sun's heat, and its war elephants blow out sprays of water from their trunks.
The monkey army marching to meet them finds both welcome: the shade and the cool spray refresh them from the weariness of battle before the fighting has even begun.