கம்பராமாயணம் 8463 · யுத்த 20.14

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '

பொருள் · Meaning in Tamil

இந்திரன் பகைஞனே கொல் என்பதோர் அச்சம் எய்தி - (அவ்வாறு மகரக்கண்ணன் வருதலைக் கண்ட வானர சேனை முன்னர் வந்த இந்திரனுக்குப் பகைவனான இந்திரசித்தோ என்பதாகிய ஒரு பயத்தை அடைந்து; தந்திரம் இரிந்து சிந்த - படைநிலை கெட்டுச் சிதறி ஓடவும்; படைப் பெருந் தலைவர் தாக்கி எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார் - வானர சேனைப் பெருந்தலைவர்கள் அவனோடு பொருது, எந்திரம் எறிந்தாற் போல (அவனால் விடப்பட்ட) அம்பினால் தாக்குண்டு புரண்டாராகவும், எய்தி - (இங்ஙனமாகப் படை நிலை கெடவும் தலைவர் புரளவும் போர் புரிந்த வண்ணம்) இராமனைச் சென்றடைந்து; சுந்தரத் தோளினானை நோக்கி நின்று - அழகு பொருந்திய தோளினையுடைய அவ்விராமனை நோக்கி நின்று; இனைய சொன்னான் - இவ்வாறான (கீழ்வருமாறு) சொற்களைச் சொல்பவனானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seized by the fear 'Is this the enemy of Intiraṉ?',
  2. the ranks broke and scattered; the great commanders who attacked him
  3. were struck by arrows and rolled over, as if hurled by an engine; reaching him,
  4. he stood facing the one of beautiful shoulders and said these words.

What the poem says

Seeing this new champion charge, the monkeys panic, fearing it is Intiracittu, the conqueror of the god Intiraṉ, who has already brought them to grief earlier in the war. Their ranks break and run.

The monkey commanders who stand against him are knocked flat by his arrows, as though flung from a siege engine. Makarakkaṇṇaṉ reaches Irāmaṉ, stops in front of him and speaks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'intiraṉ pakaiñaṉē kol? ' eṉpatu ōr accam eytit
tantiram irintu cinta, paṭaip perun talaivar, tākki
entiram eṟinta eṉṉa, ēvuṇṭu puraṇṭār; eyti,
cuntarat tōḷiṉāṉai nōkki niṉṟu, iṉaiya coṉṉāṉ.