கம்பராமாயணம் 8464 · யுத்த 20.15

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 "
பாட வேறுபாடு · Project Madurai reads
1"என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உண்டாய் " என்று
முன் உடைத்தாய தீய முழுப்பகை மூவர்க்கு இன்றி,
நினுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென் 'என்றான்
பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம்பொன் தாரான்

பொருள் · Meaning in Tamil

பொன்னுடைத் தாதை - பொன்போன்ற நிறத்தை உடைய மகரந்தத்தை; வண்டு குடைந்து உணும் பொலம் பொன்தாரான் - வண்டுகள் குடைந்து உண்ணும்படியான மிக்க அழகிய மாலையை உடைய மகரக்கண்ணன்; "என்னுடைத் தாதை தன்னை இன்னுயிர் உண்டாய்" - (இராமனை நோக்கி) "என்னுடைய தந்தையினது இனிய உயிரை நீ போக்கினாய்” என்னும் முன் உடைத்தாய தீய முழுப்பகை - "என்று (எனக்கு) முன்னமே உண்டாகிய கொடிய பெரும் பகையானது; மூவர்க்கு அன்றி, நின்னுடைத்து ஆயது அன்றே - மும்மூர்த்திகளிடம் இல்லாமல் உன்னிடத்து உள்ளது அல்லவா? இன்று அது நிமிர்வென் என்றான் - இன்று அந்தப் பகையை நீக்கித் தலையெடுப்பேன்” என்று சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. '"You took the sweet life of my own father" —
  2. that whole, evil feud which began long ago lies not with the Three
  3. but with you, does it not? Today I will settle it,' said
  4. he of the bright golden garland, whose golden pollen the bees dig into and drink.

What the poem says

Makarakkaṇṇaṉ confronts Irāmaṉ directly. The deep feud between them goes back to the day Irāmaṉ killed his father, and it is with Irāmaṉ alone that he has a quarrel, not with the Three, the great gods Brahmā, Viṣṇu and Śiva.

The irony is that Irāmaṉ is himself Viṣṇu in human form, one of the very Three he sets aside. The speaker's garland is so fresh that bees burrow into its golden pollen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"eṉṉuṭait tātai taṉṉai iṉ uyir uṇṭāy " eṉṉum
muṉ uṭaittāya tīya muḻup pakai mūvarkku aṉṟi,
niṉṉuṭaittu āyatu aṉṟē; iṉṟu atu nimirveṉ 'eṉṟāṉ
poṉṉuṭait tātai vaṇṭu kuṭaintu uṇum polam poṉ tārāṉ