கம்பராமாயணம் 8473 · யுத்த 20.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கவிகள் - குரங்குகள்; போயின திசைகள் எங்கும் புகையோடு நெருப்புப் போர்ப்ப - (தாம்) ஓடிய திக்குகளிலெல்லாம் புகையும், நெருப்பும் மூடிக்கொள்ளவும்; செல்லும் தீ இனம் அமைய மாய மா மாரிசிந்த - மேகமும் நெருப்புத் தொகுதி பொருந்த பெரு மழையை அழியும்படியாகப் பொழியவும்; ஆயிரம் கோடி மேலும் அவிந்தன - (அதனால்) ஆயிரம் கோடிக்கும் மிகுதியாக மடிந்தன; ஐயன், “மாயமோ? வரமோ?” என்றான் - (அதனைக் கண்ட) இராமன் (வீடணனை நோக்கி) “இது மாயத்தினால் நிகழ்ந்ததா? (அல்லது) வரத்தின் பயனால் உண்டானதா?” என்று கேட்டான்; வீடணன் வணங்கிச் சொல்வான் - (அதைக் கேட்ட) வீடணன் வணங்கிப் பின்வருமாறு கூறலானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In every direction they fled, smoke and fire enveloped them,
- and a great magic rain poured down, joined with masses of fire;
- more than a thousand crores of monkeys perished; the lord
- said, 'Is this sorcery, or a boon?' Vīṭaṇaṉ bowed and replied:
What the poem says
Wherever the monkeys run, smoke and fire close around them, and a magical rain mixed with flames falls on them. Monkeys die in their thousands of crores.
Irāmaṉ turns to Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother who has come over to his side and knows the demons' secrets. Is this an illusion, he asks, or a power granted by a boon? Vīṭaṇaṉ bows and begins to explain.