கம்பராமாயணம் 8476 · யுத்த 20.27

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'!
பாட வேறுபாடு · Project Madurai reads
1அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம்
ஒத்தன உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப்
பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனைப் பார்த்த
வித்தகன், 'ஒருவன் செய்த வினையம் '! என்று இனைய சொன்னான்;

பொருள் · Meaning in Tamil

அத்துணை, அரக்கன் நோக்கி - அவ்வளவில், மகரக் கண்ணன் (தான் உருவாக்கிய மழையும் காற்றும் அழிந்ததைப்) பார்த்து; அந்தர வானமெல்லாம் ஒத்தன உருவே ஆக்கி - இடைவெளியாயுள்ள வானமெல்லாம் தன்னை ஒத்தனவாகிய உருவங்களை (மாயத்தால்) தோற்றுவித்து; தான் மறைந்து ஒளித்து - தன் உரு வெளிப்படாமல் மறைந்து பதுங்கி; சூலப் பத்திகள் கோடி கோடிப் பரப்பினன் - சூல வரிசைகளைக் கோடி கோடியாகப் பரப்பினான்; அதனைப் பார்த்த வித்தகன் - அதனைப் பார்த்த ஞான வடிவினனாகிய இராமன்; “ஒருவன் செய்யும் வினையம்” என்று இனைய சொன்னான் - “ஒருவன் செய்யும் சூழ்ச்சி என்னே” (என வியந்து) என்று இப்படியாகச் சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that, the demon, seeing this, filled the whole open sky
  2. with forms just like his own, and hiding himself out of sight,
  3. spread out row upon row of tridents, crores upon crores; seeing it,
  4. the wise one said, 'What a trick one man can play!' and spoke these words.

What the poem says

His storm defeated, Makarakkaṇṇaṉ tries another illusion. He fills the sky with copies of himself, hides his real body among them, and sends out endless ranks of tridents.

Irāmaṉ, called 'the wise one', watches with something like admiration at the cunning of a single warrior, and begins to think aloud.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1at tuṇai, arakkaṉ nōkki, antara vāṉam ellām
ottaṉa uruvē ākki, tāṉ maṟaintu oḷittu, cūlap
pattikaḷ kōṭi kōṭi parappiṉaṉ; ataṉaip pārtta
vittakaṉ, 'oruvaṉ ceyyum viṉaiyam '! eṉṟu iṉaiya coṉṉāṉ;