கம்பராமாயணம் 8477 · யுத்த 20.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“மாயத்தால் யாண்டும் வரம்பிலா உருவம் வகுத்தான்” - (மகரக்கண்ணன்) மாயத்தினால் அளவில்லாத உருவத்தை எவ்விடத்தும் தோன்றும் படியாகச் செய்தான்; “தான் எத்தேயத்தான் என்னா வண்ணம் கரந்தனன் - “தான் எந்த இடத்தில் இருக்கிறான் என்று சொல்ல முடியாதபடி ஒளித்து விட்டான்; “தெரிந்திலாதான்” - (அங்ஙனம்) ஒளித்துவிட்ட அவன்; “காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் - உடம்பினால் இத்தன்மையான் என்று நினைக்கும்படியான நினைவுக்கு உட்பட்டவன் அல்லன்; “தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல்?” - தீயை ஒத்தகொடியவனாகிய அவனிடத்துச் செய்யக்கூடிய செயல் யாது?” எனச் சிந்தை நொந்தான் - என்று மனம் வருந்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'By sorcery he has shaped forms without number everywhere; he has hidden himself
- so that none can say in what place he is; he cannot be seen,
- nor is he one whom the mind can grasp as having such and such a body;
- what can be done against this fire-like one?' — so he grieved in his heart.
What the poem says
Irāmaṉ weighs the problem. The demon has scattered countless copies of himself across the sky and hidden so well that no one can tell where he is or even which shape is truly his.
How do you strike an enemy like that, an enemy as deadly as fire? For a moment Irāmaṉ is troubled.