கம்பராமாயணம் 8479 · யுத்த 20.30

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் - கூர்மையுடைத்தாய் இடியைப் போலச் செல்லுகின்ற இராமனது அம்புடன்; அரக்கன் யாக்கை - மகரக்கண்ணனது உடல்; புயல் படக் குருதி வீசி படியிடைப் புரள்தலோடு - மேகம் மழை பொழிவது போல இரத்தத்தைப் பொழிய விட்டுப் பூமியில் விழுந்து புரண்ட அளவில்; சூழ்ந்த மாயை - (அவனால் விளைவிக்கப் பெற்றுச் சூழ்ந்திருந்த மாயையானது; வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின் விளைவினோடும் - சூரியன் இருளைக் கெடுத்து ஓட்டும்படியான விடியற்காலம் தோன்றியதும்; துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது - உறக்கம் நீங்க (அவ்வுறக்கத்திற் கண்ட) கனவு (முற்றிலும் பொய்யாய்) அழிந்து போனதை ஒத்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the demon's body, with the sharp arrow that flew like a thunderbolt,
  2. sprayed blood like a rain cloud and rolled upon the ground,
  3. the illusion that surrounded them was like a dream that dies
  4. when sleep breaks, at the coming of the hour when sunlight drives the darkness out.

What the poem says

When Makarakkaṇṇaṉ's body hits the ground, pouring out blood like rain from a cloud, all his magic vanishes at once.

The poet compares it to a dream that dissolves the moment the sleeper wakes at dawn, when the sun chases away the night: the illusions were never real, and now nothing remains of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ayil paṭaittu urumiṉ cellum ampoṭum, arakkaṉ yākkai,
puyal paṭak kuruti vīci, paṭiyiṭaip puraḷtalōṭum
veyil keṭuttu iruḷai ōṭṭum kālattiṉ viḷaiviṉōṭum
tuyil keṭak kaṉavu māyntāl ottatu cūḻnta māyai.