கம்பராமாயணம் 8480 · யுத்த 20.31

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வண்ணக் கொடி நெடுந்தேரன் - அழகிய கொடி கட்டப் பெற்ற பெரிய தேரை உடையவனும்; கோடைப் பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ்சுடர் மேகப் பண்பன் - கோடைக்காலத்துச் சூரியனிடையே தோன்றுகின்ற பசிய ஒளியை உடைய மேகத்தின்தன்மையை உடையவனும்; குருதியின் கண்ணன் - ஆகிய குருதிக்கண்ணன்; எரிகணை சிந்தி காலின் எய்தான் - நெருப்பை உமிழ்கின்ற அம்புகளை எய்துகொண்டு காற்றைப் போல விரைந்து வந்தான்; விரிகடல் தட்டான் கொல்லன் வெஞ்சினத் தச்சன், வெய்யோன் - (அவனை) பெரிய கடலைத் தடுத்து அணை கட்டியவனும், கொல்லும் தன்மையனும், வெம்மையான கோபத்தினால், அச்சமுறச் செய்பவனும், (பகைவர்க்கு) கொடுமையானவனும் ஆகிய நளன் (என்னும் வானரவீரன்); தன்னோடு ஏற்றான் - தன்னோடு போர் புரியுமாறு (முன்சென்று) எதிர்த்தான்.

இச்செய்யுளில் தட்டான், கொல்லன், தச்சன் என்னும் சாதிப் பெயர்கள் அமைந்துள்ளமை காண்க. தட்டான் - தடுத்தவன். வெஞ்சினத்து - அச்சன் - வெஞ்சினத்தச்சன். அச்சத்தைத் தருபவன் அச்சன். கடலைத் தடுத்து அணை கட்டியவன் என்பதால் எதிர்த்தவன் நளன் என்பது பெறப்பட்டது. குருதிக்கண்ணன் - சோணிதக் கண்ணன்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Kuruti's-eye, lord of the tall chariot with its coloured banner, a man with the nature
  2. of a cloud glowing green that appears in the midst of the summer sun,
  3. came on like the wind, scattering fiery arrows; and he who met him
  4. was the dammer of the wide sea, the killer, the one who strikes terror in fierce wrath, the cruel one.

What the poem says

With Makarakkaṇṇaṉ dead, his escort Cōṇitakkaṇṇaṉ, here called Kurutikkaṇṇaṉ (both names mean 'blood-eye'), charges forward, dark against the glare like a cloud lit by the summer sun, shooting arrows of fire.

His opponent is not named but is clearly Naḷaṉ, the monkey engineer who dammed the ocean to build the bridge to Ilaṅkai. The poet plays on words: Naḷaṉ is called taṭṭāṉ (goldsmith, but here 'the one who checked' the sea), kollaṉ (blacksmith, here 'killer') and taccaṉ (carpenter, here 'one who causes fear'), three craftsmen's names hidden in his epithets.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kurutiyiṉ kaṇṇaṉ, vaṇṇak koṭi neṭun tēraṉ, kōṭaip
parutiyiṉ naṭuvaṇ tōṉṟum pacuñ cuṭar mēkap paṇpaṉ,
eri kaṇai cinti, kāliṉ eytiṉāṉ taṉṉōṭu ēṟṟāṉ
viri kaṭal taṭṭāṉ, kollaṉ, veñ ciṉat taccaṉ, veyyōṉ.