கம்பராமாயணம் 8481 · யுத்த 20.32

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்று, அவன் நாம வில்நாண் - அப்பொழுது, குருதிக் கண்ணன் அச்சத்தைத் தருகின்ற வில்லின் நாணை; அலங்கல் தோள் இலங்க வாங்கி - மாலையணிந்த தோள் விளங்கும் படியாக இழுத்து; ஒன்று அல பகழி மாரி - பலவாகிய அம்பு மழையை, ஊழித் தீ என்ன, உய்த்தான் - ஊழிக்காலத்துத் தீயைப் போலச் (நெருப்பு உமிழும்படியாகச் செலுத்தினான்; நின்றவன் - அவனுடன் போருக்கு எதிரூன்றி நின்றவனாகிய நளன்; நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி - நெடியதாகிய ஒரு மரத்தினால் (அந்த அம்புகளை) அப்பாற் செல்லும்படி நீக்கி; கரியின் வாரிக்கு எதிர்படர் சீயம் அன்னான் சென்றனன் - யானைக் கூட்டத்திற்கு எதிராகச் செல்லுகின்ற சிங்கத்தை ஒத்தவனாகிச் சென்றான்.

நாமம் - அச்சம். ஒன்று அல - ஒன்று அல்லாதது; பல என்றவாறு. கரியின் வாரி - யானைக் கூட்டம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then he drew the string of his dreadful bow till his garlanded shoulders shone,
  2. and sent a rain of arrows, not one but many, like the fire at the end of an age;
  3. the one who stood against him swept them far aside with a tall tree there,
  4. and went forward like a lion advancing upon a herd of elephants.

What the poem says

Kurutikkaṇṇaṉ draws his terrible bow and looses a rain of arrows, fierce as the fire that ends the world.

Naḷaṉ simply bats them aside with a tall tree and advances on him, like a lion charging into a herd of elephants.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṟu, avaṉ nāma vil nāṇ alaṅkal tōḷ ilaṅka vāṅki
oṉṟu ala pakaḻi māri, ūḻit tī eṉṉa uyttāṉ
niṉṟavaṉ, neṭiyatu āṅku ōr taruviṉāl akala nīkki,
ceṉṟaṉaṉ kariyiṉ vārikku etir paṭar cīyam aṉṉāṉ.