கம்பராமாயணம் 8483 · யுத்த 20.34

Section யுத்த காண்டம் / 20. மகரக் கண்ணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எரியும் வெங்குன்றின் உம்பர் - நெருப்பு எரிகின்ற கொடிய மலையின்மேலே; இந்திரவில் இட்டென்ன - இந்திரவில் தோன்றினாற் போல; பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன் - பெருந்தோற்றமுள்ள குருதிக் கண்ணனது தலையின் மேல் நின்ற மிக்க அழகை உடைய நளன்; வன் கண்ணின் மூக்கின் செவிகளின் சோரி சொரிய - (குருதிக்கண்ணனது) வலிய கண்களிலும், மூக்கிலும், செவிகளிலும் இரத்தம் சொரியவும்; மூளை தூங்க - மூளை சிதைந்து வழியவும்; நெரிய வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தில் இட்டான் - (அவனது) வலிய தலையை நெரியும் படியாகக் காலால் உதைத்து (அவனைப் பூமியில் தள்ளினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a rainbow set above a blazing, fierce mountain,
  2. the most handsome one stood upon the giant's head; and making blood
  3. pour from his cruel eyes, his nose and his ears, and his brains hang out,
  4. he kicked that hard head till it was crushed, and laid him on the wide earth.

What the poem says

Naḷaṉ stands on the huge demon's head like a rainbow arched over a volcano.

He stamps and kicks until the skull is crushed and blood streams from the eyes, nose and ears, then drives his enemy down into the earth. Kurutikkaṇṇaṉ is dead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eriyum veṅ kuṉṟiṉ umpar, intiravil iṭṭeṉṉa,
periyavaṉ talaimēl niṉṟa pēr eḻilāḷaṉ, cōri
coriya, vaṉ kaṇṇiṉ mūkkiṉ cevikaḷiṉ mūḷai tūṅka,
neriya, vaṉ talaiyaik kālāl utaittu, mānilattil iṭṭāṉ.