கம்பராமாயணம் 8484 · யுத்த 20.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலத்தலோடும் - குருதிக் கண்ணன் இறந்த அளவில்; அழற்கொழுந்து ஒழுகும் கண்ணான் சிங்கன் - நெருப்பை உமிழும் கண்களை உடைய சிங்கன்; வெங்கணையன், வில்லன் தார் அணி தேரின் மேலான் - கொடிய அம்பை உடையவனும், வில்லை உடையவனும், சிறு மணிகள் கட்டிய தேரின் மேல் ஏறியவனுமாகி, “எங்கு அடா! போதி?” என்னா எய்தினன் - (நளனைப் பார்த்து) “எங்கடா போகிறாய்?” என்று சொல்லிக் கொண்டே வந்தான் (அப்பொழுது); எதிர் இலாத, பங்கம் இல்மேரு ஆற்றல் - கெடுதலில்லாத மேருவைப் போன்ற ஆற்றலை உடையவனும், தனக்கு நிகரொருவருமில்லாதவனுமாகிய; பனசன் வந்து இடையில் பாய்ந்தான் - பனசன் (என்னும் வானர வீரன் நடுவிலே வந்து குதித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he died there, Ciṅkaṉ, whose eyes poured flames of fire,
- with fierce arrows and bow, riding a chariot hung with bells,
- came on crying 'Where are you going, fellow?'; and Paṉacaṉ, who had no rival,
- with the strength of flawless Mēru, came and leapt between them.
What the poem says
As Kurutikkaṇṇaṉ dies, the second escort, Ciṅkaṉ, eyes blazing, drives his bell-hung chariot at Naḷaṉ, shouting a contemptuous challenge.
Before he can reach him, Paṉacaṉ, another monkey champion, unmatched and as steadfast as Mount Mēru, jumps into his path.