கம்பராமாயணம் 8488 · யுத்த 21.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கரன்மகன் பட்டவாறும் - கரனுடைய மகனான மகரக் கண்ணன் இறந்த வகையினையும்; குருதியின் கண்ணன் காலின் சிரன் நெரிந்து உக்கவாறும் - இரத்தாட்சன் என்னும் அரக்கன் (நளனது) காலினால் சிரம் நெரிந்து உயிர்விட்ட வகையினையும்; சிங்கனது ஈறும் - (பனசனால் ஏற்பட்ட) சிங்கனது முடிவினையும்; சேனைப் பரம்இனி உலகுக்கு ஆகாது என்பதும் - (தனது) சேனைப் பாரம் இனி உலகில் இல்லாமல் ஒழிந்ததென்பதையும்; பகரக் கேட்டான் - (தூதர்கள் அறிந்து) சொல்லக் கேட்டவனாய்; வரன் முறை துறந்தான் - நீதிநெறியினை நீங்கியவனாகிய இராவணன்; “வல்லைத் தருதிர் என் மகனை” என்றான் - “என் மகனை (இந்திரசித்தை) விரைவில் அழைத்து வருவீராக” என (அத்தூதரிடம்) கூறினான்.
தனக்கு மேன்மேலும் ஏற்படுகின்ற தோல்விகளைக் கண்டும் மனம் மாறுபடாமல் - தன் தவற்றை உணராமல் அகங்காரம் கொண்டு செயல்படுகின்றானாகையால் இராவணனை “வரன்முறை துறந்தான்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- How Karaṉ's son was slain, how Kuruti's-eye's head
- was crushed under a foot and spilled, the end of Ciṅkaṉ, and that the burden of an army
- would never again exist in the world: he heard it told;
- and he who had abandoned right order said, 'Bring my son here at once.'
What the poem says
A new episode begins, the Piramāttirap paṭalam, named after the Brahmā weapon that will soon be used. The messengers tell Irāvaṇaṉ how Makarakkaṇṇaṉ, Kurutikkaṇṇaṉ and Ciṅkaṉ died and that their whole army is gone.
The poet calls Irāvaṇaṉ 'he who abandoned right order': defeat after defeat has not made him reconsider his wrong, and in his pride he sends for his son Intiracittu.