கம்பராமாயணம் 8489 · யுத்த 21.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“கூயினன், நுந்தை” என்றார் - (இராவணன் பணித்தவாறு இந்திரசித்தை அணுகிய தூதர்கள் “உமது தந்தையார் (உம்மை) அழைத்தனர் எனத் தெரிவித்தனர்; குன்று எனக் குவிந்த தோளான் - குன்று போலத் திரண்ட தோளை உடையவனான இந்திரசித்து; “போயின நிருதர் யாரும் பொன்றினர் போலும்!” என்றான் - (போருக்குக்) சென்ற அரக்கர்கள் யாவரும் இறந்து பட்டனரோ?” எனக் கேட்டான்; “ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர்?” என்னா - (இராவணனால் இம்மனிதர் மீது) போருக்கு என ஏவின பின்பு (பொருத பின் அப்போர்க்களத்தினின்றும்) மீண்டு திரும்பி வருபவர் உன்னையல்லால் வேறு யார் இருக்கிறார்கள்?” எனக் கூறி; மேயது சொன்னார் தூதர் - (போர்க் களத்தில்) நிகழ்ந்ததனைத் தூதர்கள் எடுத்துரைத்தனர்; தாதை பால் விரைவின் வந்தான் - (அதனைக் கேட்ட இந்திரசித்தன்) தந்தையினிடத்தினில் விரைந்து வந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Your father has called you,' they said; he of the hill-heaped shoulders
- said, 'All the demons who went must have perished, it seems';
- 'Once sent out, who but you ever comes back?' —
- so the messengers told what had happened; and he came swiftly to his father.
What the poem says
The messengers summon Intiracittu. Hearing he is wanted, he guesses at once that everyone who went out has been killed.
The messengers confirm it: of all those sent against Irāmaṉ, only Intiracittu has ever come back alive. They tell him what happened, and he hurries to his father.