கம்பராமாயணம் 8490 · யுத்த 21.3

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1வணங்கி, "நீ, ஐய! நொய்தின் மாண்டனர் மக்கள் 'என்ன
உணங்கலை; இன்று காண்டி; உலப்பு அறு குரங்கின் ஓங்கல்
பிணங்களின் குப்பை, மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதை காணும்; அமரரும் காண்பர் '' என்றான்.

பொருள் · Meaning in Tamil

வணங்கி “நீ ஐய!” “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன உணங்கலை - (இந்திரசித்து, தன் தந்தையை) வணங்கி, 'ஐயனே நீ (வன்மையான) புதல்வர்கள் (பகைவரால்) இறந்தொழிந்தார்கள்' என வாடி வருந்துதல் தவிர்க; இன்று காண்டி - (எனது போர்த்திறனை) இன்றே காண்பாய்; உலப்பறு குரங்கை நீக்கி, பிணங்களின் குப்பை - அளவற்ற குரங்குச்சேனைகளை (உயிர் நீக்குவதனால் (அவற்றின்) பிணக்குவியலையும்; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை - ஏனை மனிதராகிய இராம இலக்குவரின் உயிர் நீங்கிய உடம்புகளையும்; “கணங்குழைச் சீதைதானும் அமரரும் காண்பர்” என்றான் - காதணி அணிபவளான சீதையும், தேவர்களும் காண்பார்கள்” என்று கூறினான்.

உலப்பறு - அளவற்ற, குப்பை - குவியல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bowing, he said: 'Sir, do not wither in grief saying "My sons have been easily slain";
  2. today you shall see. Ridding the world of the countless monkeys,
  3. the heaps of their corpses, and the bodies of those other men with life departed,
  4. Cītai of the heavy earrings and the gods will see.'

What the poem says

Intiracittu bows to his father and tells him to stop grieving over the sons and warriors who have fallen so easily.

Today, he promises, he will slaughter the countless monkeys, and Cītai, the captive princess, along with the watching gods, will see their heaped corpses and the lifeless bodies of 'those men', Irāmaṉ and Ilakkuvaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇaṅki, "nī, aiya! noytiṉ māṇṭaṉar makkaḷ 'eṉṉa
uṇaṅkalai; iṉṟu kāṇṭi; ulappu aṟu kuraṅkai nīkki,
piṇaṅkaḷiṉ kuppai, maṟṟai narar uyir pirinta yākkai
kaṇaṅ kuḻaic cītaitāṉum, amararum kāṇpar '' eṉṟāṉ.