கம்பராமாயணம் 8491 · யுத்த 21.4

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வலம் கொடு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட
பொலம் கொடி நெடுந்தேர் ஏறி, போர்ப்பணை முழங்கப் போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம், யானைக்
குலங்களும், தேரும், மாவும், குழாம்கொளக் குழீஇய அன்றே.

பொருள் · Meaning in Tamil

வலங்கொண்டு வணங்கி - (பின்பு தன் தந்தையை) வலம் வந்து வணங்கி, வான்செல் ஆயிரம் மடங்கல் பூண்ட - வான் வழியாகச் செல்ல வல்லதும் ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்டதும்; பொலங்கொடி நெடுந்தேர் ஏறி - பொன் மயமான கொடியினை உடையதுமான நீண்ட தேரின் மேல் அமர்ந்து; போர்ப்பணை முழங்கப் போனான் - போர் முரசம் முழங்கப் (போர்க்களம் நோக்கி இந்திரசித்து) புறப்பட்டுப் போனான்; அலங்கல்வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் - (அவனுடன்) வெற்றிமாலை அணிந்த வாட்படை தாங்கிய அரக்கர் சேனை அறுபது வெள்ளமும்; யானைக் குலங்களும் தேரும், மாவும் - யானைக் கூட்டங்களும், தேர்களும், குதிரைகளும்; குழாம் கொளக் குழீஇய - கூட்டமாகத் திரண்டு சென்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Circling him reverently and bowing, he mounted the tall chariot with golden banner,
  2. yoked with a thousand lions and able to travel through the sky,
  3. and went as the war drums thundered; sixty veḷḷams of the demon army with garlands and swords,
  4. herds of elephants, chariots and horses, all massed together in throngs.

What the poem says

Intiracittu walks around his father in the clockwise circle of respect, bows, and mounts his great chariot, which is drawn by a thousand lions and can fly through the sky.

With drums booming, he sets out at the head of an enormous host: sixty veḷḷams of sword-bearing demons, with elephants, chariots and cavalry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1valaṅkoṇṭu vaṇaṅki, vāṉ cel āyiram maṭaṅkal pūṇṭa
polaṅ koṭi neṭun tēr ēṟi, pōrp paṇai muḻaṅkap pōṉāṉ;
alaṅkal vāḷ arakkar tāṉai aṟupatu veḷḷam, yāṉaik
kulaṅkaḷum, tērum, māvum, kuḻām koḷak kuḻīiya aṉṟē.