கம்பராமாயணம் 8492 · யுத்த 21.5

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கும்பிகை திமிலை செண்டை குறடு - கும்பிகை, திமிலை, செண்டை, குறடு; மாப்பேரி - பெரிய பேரிகை, கொட்டி - கொடு கொட்டி; பம்பை, தார்முரசம், சங்கம் - பம்பை, தார் அணியப் பெற்ற முரசம், சங்கம்; பாண்டில், போர்ப்பணவம், தூரி - கஞ்சதாளம், போருக்குரிய பணவம், தூரியம்; கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை - கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை; துடி வேய் கண்டை - உடுக்கை, மூங்கிலால் ஆகிய வங்கியம், கண்டை; அம்பலி, கணுவை, ஊமை சகடையோடு ஆர்த்த - அம்பலி, கணுவை, ஊமை சகடை இயங்கள் ஆரவாரித்தன.

போர் மேற்செல்லும் வீரர்களுக்குப் போர் வெறி ஊட்டுபவை இவ்வியங்கள். இவை கவிஞர் காலத்தன எனக் கொள்ளவும் இடமுண்டு. கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பம்பை, பணவம், உறுமை, தக்கை, கண்டை, அம்பலி, கணுவை, ஊமை, சகடை என்பன தோற்கருவிகள். சங்கம், தூரி, வேய் என்பன துளைக்கருவிகள். கொட்டி - கொடு கொட்டி என்னும் பறை. வேய் - மூங்கிலால் ஆகிய வங்கியம் என்னும் துளைக் கருவி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Kumpikai, timilai, ceṇṭai, kuṟaṭu, the great pēri, the koṭṭi,
  2. pampai, the garlanded war drum, the conch, cymbals, the war paṇavam, the tūri,
  3. kampali, uṟumai, takkai, karaṭikai, the tuṭi, the bamboo flute, the bell,
  4. ampali, kaṇuvai, ūmai, together with the cakaṭai — all of them roared.

What the poem says

The poet lists the instruments sounding as Intiracittu's army marches, nearly all of them drums of various shapes and sizes, with conches, cymbals, horns, a bamboo flute and bells.

These instruments were played to stir warriors into battle fury. Most names are left untranslated because they refer to specific traditional drums; the commentary suggests many may have been in use in the poet's own time.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kumpikai, timilai, ceṇṭai, kuṟaṭu, māp pēri, koṭṭi,
pampai, tār muracam, caṅkam, pāṇṭil, pōrp paṇavam, tūri,
kampali, uṟumai, takkai, karaṭikai, tuṭi, vēy, kaṇṭai,
ampali, kaṇuvai, ūmai, cakaṭaiyōṭu ārtta aṉṟē.