கம்பராமாயணம் 8493 · யுத்த 21.6

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1யானைமேல் பறை, கீழ்ப் பக்கத்து எறிமணி, இரதத்து ஆழி,
மான மாப் புரவிப் பொன் தார், மரக் கொடி கண்டை, மானச்
சேனையோர் கழலும் தாரும் சேண் தரப் புலம்ப, மற்றை
வானகத்து ஓடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே.

பொருள் · Meaning in Tamil

யானை மேல் பறைசால் ஈட்டத்து - யானை மேல் வைக்கப் பட்டுள்ள முரசுக் கூட்டத்துடன்; அறை மணி ஆழி ஆர்த்தது - தேர்ச்சக்கரங்களில் மாறி மாறி ஒலிக்கின்ற மணிகளின் ஆர்ப்பும்; மானமாப் புரவிப் பொன்தார் - தருக்குடன் கூடிய சிறந்த புரவிகள் பூண்ட பொன்னாலாகிய கிண்கிணி மாலையும்; மாக்கொடி கொண்ட மானச் சேனையோர் கழலும் தாரும் - பெரிய கொடிகளை ஏந்திய குன்றாத மானமுடைய சேனை வீரர்களின் வீரக்கழலும், பொன்னரி மாலையும் ஆகிய இவற்றின் ஒலிகள்; சேண் தரப் புலம்ப - சேணளவும் சென்றொலிப்ப; மற்றை வானகத்தோடும் ஆழி அலைஎன, வளர்ந்த - ஏனை வானிடமளவும் சென்று படரும் கடலின் அலைகளைப் போன்று விரிந்து உயர்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Along with the mass of drums on the elephants, the ringing bells on the chariot wheels sounded;
  2. the golden bell-garlands of the proud fine horses, and the anklets and chains
  3. of the proud soldiers who carried great banners, sounded far and wide,
  4. and rose up like the waves of the sea reaching to the very sky.

What the poem says

More sounds of the marching army: drums carried on elephants, bells on the chariot wheels, strings of tiny golden bells on the horses, and the warriors' heroic anklets and gold chains jingling as they move.

Together these sounds carry for miles, swelling like ocean waves rising to meet the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāṉaimēl paṟaicāl īṭṭattu aṟai maṇi āḻi ārttatu,
māṉa māp puravip poṉ tār, māk koṭi koṇṭa māṉac
cēṉaiyōr kaḻalum tārum cēṇ tarap pulampa, maṟṟai
vāṉakattōṭum āḻi alai eṉa, vaḷarnta aṉṟē.