கம்பராமாயணம் 8494 · யுத்த 21.7

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சங்கொலி - சங்கின் ஒலியும்; வயிரின் ஓசை - ஊதுகொம்பின் ஓசையும்; ஆகுளி - ஆகுளியின் ஒலியும்; தழங்கு காளம் பொங்கு ஒலி - காளம் என்னும் வாத்தியத்தினின்றும் மிக்குத் தோன்றுகின்ற ஒலியும்; வரிகண் பீலிப் பேர் ஒலி - மயிற் கண் வரிந்த பீலியென்ற வாத்தியத்தின் பேரொலியும்; வேயின் பொம்மல் - புல்லாங்குழலின் ஓசையும்; சிங்கத்தின் முழக்கம் - சிங்கத்தின் முழக்கமும்; வாசிச் சிரிப்பு - குதிரையின் கனைப்பொலியும்; தேர் இடிப்பு - தேரினின்றும் தோன்றுகின்ற இடி போன்ற ஒலியும்; திண்கைம் மங்குலின் அதிர்வு - வலிய துதிக்கையினை உடைய மேகம் போன்ற யானையின் ஒலியும்; மழையொடு மலைந்த - (ஆகிய இவை) வானத்திலுள்ள மேகங்களின் ஒலியோடு மாறுபட்டுத் தோன்றின.

வயிர் - ஊதுகொம்பு. ஆகுளி - சிறு பறை. தழங்குதல் - ஒலித்தல், காளம் - எக்காளம், பீலி - சிறு சின்னம் என்னும் துளைக்கருவி. வாசி - குதிரை. திண்கை மங்குல் என்பது அன்மொழித் தொகையாக யானையைக் குறித்தது. (திண்மையான துதிக்கையை உடைய மேகம். மேகம் இங்கே யானைக்கு உருவகம்.)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sound of conches, the blare of horns, the ākuḷi, the swelling roar
  2. of the booming kāḷam, the great sound of the pīli striped with peacock eyes, the swell of flutes,
  3. the roar of lions, the neighing laughter of horses, the thunder of chariots, the rumbling
  4. of the strong-trunked clouds — all these battled with the clouds of the sky.

What the poem says

Still more sounds: conches, horns, small drums, trumpets, pipes and flutes, mixed with the roaring of the lions that draw the chariot, the neighing of horses, and the rumble of chariot wheels.

'Strong-trunked clouds' means the elephants, dark and huge as rain clouds. All this noise rivals the thunder in the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caṅku oli, vayiriṉ ōcai, ākuḷi, taḻaṅku kāḷam
poṅku oli, vari kaṇ pīlip pēr oli, vēyiṉ pommal,
ciṅkattiṉ muḻakkam, vācic cirippu, tēr iṭippu, tiṇ kaim
maṅkuliṉ atirvu, vāṉa maḻaiyoṭu malainta aṉṟē.