கம்பராமாயணம் 8495 · யுத்த 21.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பண்தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீந்தேன் - பண்ணைத் தோற்றுவிக்கின்ற சொற்களின் தன்மையினை உடைய பலவகை வாத்தியங்களினின்றும் தோன்றும் இனிய இசையாகிய தேனும்; கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல் - கற்கண்டு போன்ற இனிய சுவை உடையதாய் அமைந்த வீணை நரம்பிலிருந்து தோன்றும் (உணர்வு) மணங்கமழும் இசையாகிய தேனும், வண்டினின் பொலியும் நல்யாழ் வழியுறு நறவம் - நல்ல யாழிடத்தினின்று வருவதும் வண்டின் ஒலிபோல விளங்குகின்றதுமான இசையாகிய தேனும்; வானத்து அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய - வானுலகத்து வாழ்வாராகிய தேவர்கள் தம் செவிவாயாகப் பருகி மகிழ்தற்குரிய அமிழ்து என்று சொல்லும்படியாக (கேட்டார்க்கு) இன்பஞ்செய்வனவாயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sweet honey flowing from the many fine instruments that give forth melody like speech,
- the fragrant nectar from the strings of the vīṇai made sweet as sugar candy,
- the mead that came from the good yāḻ, rich as the hum of bees,
- became like the ambrosia the gods in heaven drink with their ears.
What the poem says
Among the war noise there is also music. The army's instruments, the vīṇai with its strings and the ancient Tamil harp called the yāḻ, pour out melodies the poet compares to honey, nectar and mead.
The sound is so sweet that it seems like amṛta, the nectar of immortality, which the gods drink in through their ears.