கம்பராமாயணம் 8496 · யுத்த 21.9

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வில்லொலி, வயவர் ஆர்க்கும் விளி ஒலி, தெழிப்பின் ஓங்கும்
ஒல்லொலி, வீரர் பேசும் உரை ஒலி, உரப்பில் தோன்றும்
செல்லொலி, திரள்தோள் கொட்டும் சேண் ஒலி, நிலத்தில் செல்லும்
கல்லொலி துரப்ப, மற்றைக் கடல் ஒலி கரந்தது அன்றே.

பொருள் · Meaning in Tamil

வில் ஒலி - வில் நாணின் ஒலியும், வயவர் ஆர்க்கும் விளி ஒலி - வீரர் ஆரவாரிக்கும் அறைகூவல் ஒலியும்; தெழிப்பின் ஓங்கும் ஒல்லொலி - அதட்டுதலால் உயர்ந்து தோன்றும் ஒல்லென்னும் ஓசையும்; வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் செல் ஒலி - வீரர் பேசுகின்ற பேச்சின் ஒலியும், (அவர்கள்) கனைத்தலால் உண்டாகிய இடி போன்ற ஒலியும்; திரள்தோள் கொட்டும் சேண் ஒலி - திரண்ட தோள்களைக் கொட்டுதலால் நெடுந்தூரத்தே சென்றிசைக்கும் ஆர்ப்பொலியும்; நிலத்தில் செல்லும் கல்லொலியோடும் - (அவ்வீரர்கள்) நிலத்தில் (விரைந்து) செல்லுதலால் உண்டாகும் கல்லென்னும் ஓசையுடன்; கூட - ஒருங்கு கூடி ஒலிக்க; கடல் ஒலி கரந்தது - கடலின் ஒலியானது இப்பேரொலிக்குள் (அடங்கி) மறைந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The twang of bows, the challenging cries the warriors roar, the clamour
  2. that swells with their shouts, the sound of the heroes' talk, the thunder
  3. that comes from their bellowing, the far-carrying sound of massive shoulders slapped,
  4. together with the clatter of feet moving over the ground: the roar of the sea was hidden by them.

What the poem says

The last of the sounds belongs to the warriors themselves: bowstrings twanging, battle cries and challenges, shouted talk, thunderous bellowing, the slap of hands on brawny shoulders (a gesture of defiance), and the clatter of their running feet.

All of it together drowns out even the roar of the ocean around Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vil oli, vayavar ārkkum viḷi oli, teḻippiṉ ōṅkum
olloli, vīrar pēcum urai oli, urappil tōṉṟum
cel oli, tiraḷ tōḷ koṭṭum cēṇ oli, nilattil cellum
kalloliyōṭum kūṭak kaṭal oli karantatu aṉṟē.