கம்பராமாயணம் 8497 · யுத்த 21.10

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நாற்கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின்
மேல்கடந்து எழுந்த தூளி விசும்பின்மேல் கொழுந்து வீச,
மால்கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப்
பாற்கடல் அனைய வாட்கண், பனி கடல் படைத்த அன்றே.

பொருள் · Meaning in Tamil

நாற்கடல் அனைய தானை நடந்திட - நாற் (றிசைக்) கடல்களை ஒத்த (நால்வகைச் சேனைகள் இவ்வாறு நடந்து செல்லுவதால்; கிடந்த பாரின் மேல் கடந்து எழுந்த தூளி - பரந்து கிடந்த பூமியிலிருந்து மேலே புறப்பட்டு எழுந்த துகள்கள்; விசும்பின்மேல் கொழுந்து வீச - ஆகாயத்தின் மேற்பரப்பில் முற்பட்டு வீசினமையால்; மால்கடல் சேனை காணும் வானவர் மகளிர் - பெருங்கடல் போலும் இந்திரசித்தின் சேனைகளைக் காண வந்த தேவ மகளிரின்; மானப் பாற்கடல் அனைய வாட்கண் - பெருமை வாய்ந்த பாற்கடலை ஒத்த ஒளிபொருந்திய அகன்ற கண்கள்; பனிக்கடல் படைத்தது - குளிர்ந்த கடலை (மிக்க கண்ணீரைத் தோற்றுவித்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the army like the four seas marched on, the dust that rose
  2. from the outspread earth and leapt above it flung its plumes upon the sky;
  3. and the sword-bright eyes, like the glorious sea of milk, of the celestial women
  4. who watched the army vast as the great sea, brought forth a sea of cool tears.

What the poem says

The march raises so much dust that it billows up into the sky, where the wives and daughters of the gods have gathered to watch.

The dust gets into their eyes, which are large and luminous like the milky ocean, and makes them stream with tears. The verse plays on the word 'sea' four times: an army like the four seas, an army like the great sea, eyes like the sea of milk, and a sea of tears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṟ kaṭal aṉaiya tāṉai naṭantiṭa, kiṭanta pāriṉ
mēl kaṭantu eḻunta tūḷi vicumpiṉmēl koḻuntu vīca,
māl kaṭal cēṉai kāṇum vāṉavar makaḷir, māṉap
pāṟkaṭal aṉaiya vāṭ kaṇ, paṉik kaṭal paṭaittatu aṉṟē.