கம்பராமாயணம் 849 · பால 13.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குரைத்த தேரும் - ஒலித்த தேர்களும்; களிறும் - யானைகளும்; குதிரையும் - குதிரைகளும்; நிரைத்த வார் முரசும் - வரிசையான நீண்ட முரசு வாத்தியமும்; எங்கணும் - எல்லா இடத்தும்; நிமிர்ந்து இரைத்த - மிகுந்து ஒலித்த; பேரொலியால் - பேரொலியால்; இடை - (அந்த) இடத்திலே (செல்லுகின்ற); யாவரும் - எவரும்; உரைத்த உணர்ந்திலர் - (ஒருவர் சொல்ல மற்றவர்) அறிய மாட்டாதவராகி; ஊமரின் ஏகினார் - ஊமைகள் போலப் பேசாமல் சென்றார்கள்.
தேர் முதலியன செல்வதாலும், முரசு முழங்குவதாலும் மிகப் பேரொலி தோன்றுகிறது. அவ்வோசையால் ஒருவர் சொல்வது மற்றொருவர்க்குக் கேட்கவில்லை. ஆதலால், ஒருவரோடு ஒருவர் பேசுவதை ஒழித்து ஊமையர்போலச் சென்றார்கள் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the rumbling chariots, the elephants and the horses
- and the long rows of drums, the great din that rose and swelled
- on every side meant that no one along the way could speak
- and be understood, and they all went on like mutes.
What the poem says
The noise of the march, chariot wheels, elephants, horses and rows of great drums, is so overwhelming that no one can hear what anyone else says.
Giving up on conversation altogether, the whole vast crowd travels in silence, like people who cannot speak.