கம்பராமாயணம் 850 · பால 13.46

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நுண் சிலம்பி - சிறிய சிலந்திப் பூச்சி; வலந்தன - பின்னியது போன்ற; நுண் துகில் - மெல்லிய ஆடைகளையணிந்த; கள் சிலம்பு - வண்டுகள் (மொய்த்து) ஒலிக்கின்ற; கருங் குழலார் - கரிய கூந்தலையுடைய மகளிரின்; குழு - கூட்டம், சிலம்பு உள் சிலம்ப - (அடிகளில் பூண்ட) சிலம்புகள் உள்ளே உள்ள பரல்கள் ஒலிக்க; ஒதுங்கலால் - நடந்து செல்வதால்; புள் சிலம்பிடு - பறவைகள் ஒலிக்கின்ற; பொய்கையும் - தடாகத்தையும்; போன்றது - ஒத்தது.

மெல்லிய ஆடையணிந்த மகளிர் கூட்டம் அலைபரந்த நீரையுடைய பொய்கைக்கு ஒப்பாயிற்று. அவர்தம் காற் சிலம்பொலி பொய்கையிலுள்ள அன்னப் பறவைகளின் ஒலிக்கு ஒத்தாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In cloth as fine as if tiny spiders had woven it,
  2. the throng of women with dark hair humming with bees,
  3. as they walked with the pellets in their anklets ringing,
  4. looked like a pool loud with the cries of birds.

What the poem says

A group of women walks together in gauzy clothes so fine they might be spider's silk. Their rippling garments look like the surface of a pool, and the chime of the little pellets inside their hollow anklets sounds like the calls of the swans on it.

The verse plays on the word cilampu, which means both "anklet" and "to sound".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nuṇ cilampi valantaṉa nuṇ tukil
kaḷ cilampu karuṅ kuḻalār kuḻu,
uḷ cilampu cilampa otuṅkalāl,
puḷ cilampiṭu poykaiyum pōṉṟatē.