கம்பராமாயணம் 8502 · யுத்த 21.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வானரம் எவையும் - (இந்திரசித்தின் ஆரவாரங்கேட்ட) வானரங்கள் யாவும்; கீண்டன செவிகள் - காதுகள் கிழியப் பெற்றன; நெஞ்சம் கிழிந்தன - மார்பு பிளந்தன; கிளர்ந்து செல்லா மீண்டன கால்கள் - உற்சாகங்கொண்டு செல்ல முடியாதனவாகக் கால்கள் திரும்பின; கையின் விழுந்தன மரனும் வெற்பும் - (ஏற்கெனவே எடுத்திருந்த) மரங்களும் மலைகளும் கைகளினின்றும் (நழுவி) விழப் பெற்றன; பூண்டன நடுக்கம் - நடுக்கம் மேற்கொண்டன; வாய்கள் புலர்ந்தன - வாய்கள் உலரப் பெற்றன; மயிரும் பொங்க “மாண்டனம் அன்றோ?” என்ற - (அச்சத்தால்) மயிர்க்கூச்செறிந்து “நாமெல்லாம் விரைவில் இறந்தொழிவோமல்லவா?” என அரற்றி வருந்தின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their ears were torn; their hearts were rent; unable to press forward,
- their legs turned back; trees and hills fell from their hands;
- they were seized with trembling; their mouths went dry; with their fur bristling,
- every one of the monkeys cried, 'Are we not dead already?'
What the poem says
The sound of Intiracittu's bow and his battle cry strikes the monkeys like a physical blow.
Their ears seem to split and their hearts to burst; their legs carry them backward instead of forward; the trees and rocks they hold slip from their grip; they tremble, their mouths dry up, their hair stands on end, and every one of them wails that they are as good as dead.