கம்பராமாயணம் 8503 · யுத்த 21.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செங்கதிர்ச் செல்வன் சேயும் - செந்நிற ஒளித் தொகுதியை உடைய செல்வனாகிய சூரியனுடைய மகன் சுக்கிரீவன்; சமீரணன் சிறுவன் தானும் - வாயுதேவனின் மகனான அனுமன்; அங்கதப் பெயரினானும் - அங்கதன் என்னும் பெயரை உடையவன்; அண்ணலும், இளைய கோவும் - இராமன், இலக்குவன்; வெங்கதிர் மௌலிச் செங்கண் வீடணன் முடிய - வெவ்விய ஒளிக்கற்றையினை உடைய (மணிகள் இழைத்த) முடியினையும் சிவந்த கண்களையும் உடைய வீடணன் வரை; வீரர் இங்கு இவர் நின்றார் - முதலாக உள்ள ஏனைய படை வீரர்களும் ஆகிய இவர்களே (போர்க்களமாகிய) இவ்விடத்தில் நின்றவர்கள்; அல்லது, இரிந்தது சேனை எல்லாம் - அல்லாமல் ஏனைய படைஞர்களாகிய குரங்குகள் அனைத்தும் நிலைகெட்டு ஓடின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The son of the lord of red rays, the son of the wind god,
- the one named Aṅkataṉ, the noble lord, and the younger prince,
- and the warriors headed by red-eyed Vīṭaṇaṉ with his crown of fierce rays:
- these stood their ground here; apart from them, the whole army fled.
What the poem says
Only the great leaders hold their ground: Cukkirīvaṉ, son of the Sun; Aṉumaṉ, son of the Wind; Aṅkataṉ, son of Vālī; Irāmaṉ and his younger brother Ilakkuvaṉ; and Vīṭaṇaṉ with his blazing jewelled crown, along with a few other champions.
Everyone else in the monkey army has run away.