கம்பராமாயணம் 8504 · யுத்த 21.17

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

படைப்பெருந் தலைவர் நிற்க - பெருமை வாய்ந்த (வானரப்) படைத்தலைவர்கள் மட்டும் (இடம் பெயராது) நிலைத்து நிற்க; பல் பெருந்தானை வேலை - மிகப்பலவாகிய (குரக்குச் சேனையாகிய கடல்; உடைப்புறு புனலின் ஓட - கரைகளை உடைத்துச் செல்லும் பெரிய நீர்ப்பெருக்கினைப் போல் ஓட; நிருதர் சேனை - (அதுகண்ட) அரக்கர் சேனையானது; ஊழிநாள் உவரி ஓதை கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது - ஊழிக் காலத்தே தோன்றும் கடல் ஓசையினைப் போன்று பேரொலி உண்டாகுமாறு முழங்கி ஆரவாரித்து உள்ளக் கிளர்ச்சி உடையதாய், திசைகள் எல்லாம் அடைத்தது - திசைகள் எல்லாவற்றையும் (வெற்றிடம் இல்லையாம்படி) அடைத்து நின்றது; அன்னவர் அகத்தர் ஆனார் - (இடம் பெயராது நின்ற இராம இலக்குவரும் ஏனைய படைத் தலைவரும்) அரக்கர் சேனையின் உள்ளிடத்தவராயினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the great commanders stood, the sea of the many great hosts
  2. ran like floodwater bursting its banks; the demon army,
  3. thundering and roaring like the ocean on the day of doom, surged up
  4. and blocked every direction; and those few were left inside it.

What the poem says

As the monkey host breaks and pours away like a river through a broken dam, the demon army roars like the ocean at the end of the world and spreads out to fill every direction.

The handful of leaders who stood firm, Irāmaṉ and Ilakkuvaṉ among them, now find themselves surrounded, deep inside the enemy's ranks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭaip perun talaivar niṟka, pal perun tāṉai vēlai
uṭaippuṟu puṉaliṉ ōṭa, ūḻināḷ uvari ōtai
kiṭaittiṭa muḻaṅki ārttuk kiḷarntatu; nirutar cēṉai,
aṭaittatu, ticaikaḷ ellām; aṉṉavar akattar āṉār.