கம்பராமாயணம் 8505 · யுத்த 21.18

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல்கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர்; அமரர் வாழ்த்தி
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவி டாமை.

பொருள் · Meaning in Tamil

மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத்தோள் மேல் வீரனும் - அனுமனுடைய அசைந்தொளிரும் இயல்பினவாகிய மலர் மாலையும் மணிகளும் அணிந்த திண்ணிய தோளின் மேல் வீரனாகிய இராமனும்; வாலி சேய் தன் விறல் கெழு சிகரத் தோள்மேல் - வாலி மைந்தன் அங்கதனுடைய வெற்றித் திறன் பொருந்திய மலைச் சிகரத்தை ஒத்த தோளின் மேல்; ஆரியற்கு இளையகோவும் - (இராமன் என்னும்) பெரியோனுக்குத் தம்பியாகிய இலக்குவனும்; ஏறினர் - (போர் மேற்செல்ல) ஏறி அமர்ந்தனர்; அமரர் வாழ்த்தி, வேரி அம்பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல் - (அதுகண்டு) தேவர்கள் (அவ்விருவரையும் வாழ்த்தித் தேன் நிறைந்த அழகிய மலர் மழையினை இடைவிடாது சொரிந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the strong shoulders of Māruti, adorned with swaying garlands and jewels, the hero,
  2. and on the victorious, peak-like shoulders of Vālī's son
  3. the younger prince of the noble one, climbed up; the gods praised them
  4. and showered down rains of honeyed, lovely flowers without pause.

What the poem says

To face Intiracittu's chariot army, Irāmaṉ mounts the shoulders of Aṉumaṉ (Māruti, son of the wind god), and Ilakkuvaṉ mounts the shoulders of Aṅkataṉ, son of Vālī.

The gods, delighted, bless the two brothers and shower them with honey-filled blossoms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māruti alaṅkal mālai maṇi aṇi vayirat tōḷmēl
vīraṉum, vāli cēytaṉ viṟal keḻu cikarat tōḷmēl
āriyaṟku iḷaiya kōvum ēṟiṉar; amarar vāḻtti
vēri am pūviṉ māri corintaṉar, iṭaiviṭāmal.