கம்பராமாயணம் 8506 · யுத்த 21.19

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விடையின்மேல், கலுழன் தன்மேல், வில்லினர் விளங்குகின்ற
கடை இல் மேல் உயர்ந்தார் காட்சி இருவரும் கடுத்தார் கணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று அன்னார்
தொடையின்மேல் மலர்ந்த தாரார், தோளின்மேல் தோன்றும் வீரர்

பொருள் · Meaning in Tamil

கண்ணுற்று அடையின் - கண்ணுக்குப் புலனாகிப் பொருந்துமாயின்; மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் - மேரு மலையையும் வீழ்த்தும், அனுமன் அங்கதன் என்ற இவர்களின்; தோளின் மேல் தோன்றும் - தோள்களின் மேல் காணப்பெறுகின்றவரும்; மேல் மலர்ந்த தொடையின் தாரர் - மேலே விளங்கும்படியான தொகுக்கப்பெற்ற மாலையினரும்; வில்லினர் வீரர் - வில் தாங்கியவருமான, இராம இலக்குவர்; விடையின் மேல் கலுழன் தன்மேல் விளங்குகின்ற - ஆனேற்றின் மீதும், கருடன் மீதும் விளங்கித் தோன்றுகின்ற; கடைஇல் மேல் உயர்ந்த காட்சி - முடிவின்றி மேம்பட்டுயர்ந்த காட்சியினை உடைய; இருவரும் கடுத்தார் - சிவன், திருமால் என்ற இரு மூர்த்திகளையும் ஒத்துத் தோன்றினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The two who shine bow in hand upon the bull and upon Garuḍa,
  2. of endlessly exalted vision, they resembled, when one beheld them:
  3. the heroes who appeared on the shoulders of Aṉumaṉ and Aṅkataṉ, who could topple Mēru itself if they closed with it,
  4. wearing garlands of flowers blooming in strings upon them.

What the poem says

Seated on the shoulders of Aṉumaṉ and Aṅkataṉ, monkeys strong enough to knock over Mount Mēru, the two garlanded brothers with their bows look like the two supreme gods on their mounts.

Śiva rides the bull Nandi and Viṣṇu rides the eagle Garuḍa; so Irāmaṉ and Ilakkuvaṉ, mounted on their monkey champions, recall Viṣṇu and Śiva in their highest glory.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṭaiyiṉmēl, kaluḻaṉtaṉmēl, villiṉar viḷaṅkukiṉṟa
kaṭaiil mēl uyarnta kāṭci iruvarum kaṭuttār kaṇṇuṟṟu
aṭaiyiṉ mēruvaiyum cāykkum aṉumaṉ aṅkataṉ eṉṟu iṉṉār
toṭaiyiṉ mēl malarnta tārār, tōḷiṉmēl tōṉṟum vīrar