கம்பராமாயணம் 8509 · யுத்த 21.22

Section யுத்த காண்டம் / 21. பிரமாத்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருள் முறை அவரும் நின்றார் - (இராமன்) பணித்தருளிய முறைப்படி (நீலன் முதலாகிய) அப்படைத் தலைவரும் பின் வரிசையில் சென்று நின்றனர்; ஆண் தகை வீரர் - ஆண்மைக்குணமுள்ள இராமஇலக்குவராகிய அவ்வீரர்கள்; ஆழி உருள் முறைத்தேரின் - சக்கரத்துடன் (விரைந்து) உருளும் முறைமையினை உடைய தேர்கள் மேலும்; மாவின் - குதிரைகள் மேலும்; ஓடை மால் வரையின் - முகபடாம் அணிந்த பெரிய மலை போலும் யானைகள் மேலும்; ஊழி இருள் முறை நிருதர் தம்மேல் - ஊழிக்காலத்து இருளின் தன்மையை உடைய அரக்க வீரர்கள் மேலும்; ஏவினர் - அம்புகளை ஏவினார்கள்; சிலை வழங்கு அசனிமாரி - (அவ்விருவருடைய) விற்கள் வெளிப்படுத்தும் இடியேற்றுடன் கூடிய அம்பு மழையானது; இமைப்பிலோரும் - கண்ணிமைத்தலில்லாத தேவர்களும்; “மருள்முறை எய்திற்று” என்பர் - (இஃது என்ன ஊழிக்காலமோ என) மருளும் நிலை அடைந்தது என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They stood as he graciously ordered; and the manly heroes, on the chariots
  2. whose wheels roll on, on the horses, on the great mountain-like elephants with face-plates,
  3. on the demons dark as the night of doom, let fly; and of the thunderbolt rain the bows poured out
  4. even the unblinking gods would say, 'It has brought on bewilderment.'

What the poem says

The monkey leaders step back as Irāmaṉ asks. The two brothers then shoot into the chariots, horses, armoured elephants, and demons as dark as the darkness at the end of the world.

Their arrows fall like a storm of thunderbolts, so fierce that even the gods, who never blink, are dazed and wonder whether the end of time has come.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruḷmuṟai avarum niṉṟār; āṇ takai vīrar, āḻi
uruḷ muṟai tēriṉ, māviṉ, ōṭai māl varaiyiṉ, ūḻi
iruḷmuṟai nirutartammēl ēviṉar imaippilōrum
'maruḷ muṟai eytiṟṟu 'eṉpar cilai vaḻaṅku acaṉi māri.