கம்பராமாயணம் 8510 · யுத்த 21.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வந்த இராக்கத வெள்ளம் தன்னை - (பொருதற்கு) எதிர் வந்த வெள்ளக் கணக்கினவாகிய அரக்கர் சேனைகளை; இமைப்பதன் முன்னம் - இமைப்பொழுதுக்குள்ளாக; குமைத்தொழில் புரிந்த வீரர் - அழிக்கும் தொழிலைப் புரிந்த வீரர்களாகிய இராம இலக்குவரது; தனுத்தொழில் குறித்து, இன்று எம்மால் அமைப்பது என்? - விற்றொழில் வன்மையைக் குறித்து எம்மால் கூறுதற்கு யாதுளது? உமைக்கு ஒரு பாகன் - உமா தேவியை ஒரு பாகத்துக் கொண்ட சிவபெருமான்; மேரு என்று அமைந்த வில்லான் - மேரு மலை என அமைந்த வில்லினால், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த - எய்து அழித்த முப்புரங்களைப் போன்று (அச்சேனைகள் யாவும்) அழிந்து வீழ்ந்தன; பிறிது ஒன்று உண்டோ? - (என்பதன்றிச் சொல்லத்தக்க உவமை) வேறொன்றுளதோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of the bow-work of the heroes who, before an eyelid could blink, destroyed
- the flood of demons that had come, what can we say today? Is there anything else to say?
- Like the cities shot down by him who shares himself with Umai,
- whose bow was the mountain Mēru, they fell all together.
What the poem says
The poet steps back in wonder: what words could describe the archery of the two brothers, who wipe out the demon host in the blink of an eye?
The only fitting comparison is Śiva, who shares his body with his wife Umai, burning the three flying cities of the demons with a single shot from his bow, the mountain Mēru. Intiracittu's army collapses just as completely.